Ad Widget

தமிழர்களின் கடவுள் பிரபாகரன்’ : சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த பல தகவல்கள் மர்மமாகவே இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் வாழந்த தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற பிரபாகரன், எவ்வாறு தமிழர்களின் காவலனாகவும், கடவுளாகவும் மாறினார் என்பதை இன்றுவரையில் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே இருப்பதாகவும் கூறினார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் எரிக் சொல்ஹெய்ம் இந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நேர்காணலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து சொல்ஹெய்ம் தொடர்ந்து குறிப்பிடுகையில், பிரபாகரனை அதிக அளவில் சந்தித்த வெளிநாட்டவராக தானே விளங்குவதாகவும் கூறினார்.

அவருடன் அதிகளவிலான நேரத்தை செலவிட முடியவில்லை என்றும், அவருடன் அதிகளவிலான நேரத்தை செலவிட்டிருந்தால், அவரிடம் அதிகளவிலான செல்வாக்கினைப் பெற்றிருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரபகாரன் ஒரு நல்ல மனிதர் என்று கூறிய சொல்ஹெய்ம், இயற்கையினை அதிக அளவில் நேசிக்கும் அவர், சமைப்பதில் கில்லாடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் நெருக்கமாக பழகி உறவினைக் கட்டியெழுப்ப முனைந்த போதிலும், அது சாத்தியப்படவில்லை என்றும், கடும் யுத்தம் காரணமாக தொடர்ச்சியாக வடக்கிற்கு செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

Related Posts