- Sunday
- May 17th, 2026
யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதற்கமைய உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறையில் 40 குடும்பங்களை சேர்ந்த...
யாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிய போதே அவர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது....
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இணைத் தலைவர்களான ரிசாட் பதூர்தீன், காதர்மஸ்தான், வடக்கு முதல்வர் சி.விவிக்கினேஸ்வரன் ஆகியோர் இல்லாத நிலையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது. எனினும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண அமைச்சர்களான க.சிவநேசன், ஞா.குணசீலன், அனந்தி சசிதரன்...
வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யபட்டு வருவதை அவதானிக்க...
வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக இந்தோனேசியாவிற்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு வீசா சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாயுபாயு நகரில் தங்கியிருந்த போது இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கும் வகையில் கிராமொன்றில் குடியேறியதாக இலங்கையர்கள்...
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது தீபத்தை...
யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது....
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹா, அஸ்வின், ஜடேஜா, ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு...
இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ள தரம் 13 வரையிலான கட்டாயக்கல்வி உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர்தர தொழில் கற்கைநெறிக்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்வுள்ளனர். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிக்காட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதற்கான வர்தத்மானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர கல்வி கற்கை...
யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பிரபலமான 30 இற்கு...
இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குமென்று வளிமண்டலவியல்...
பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய "நவெஸ்கா லேடி" கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என ஊர்ஜினப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவுசெலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சகல மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் வரவு, செலவுத் திட்டத்தை இம்முறை தயாரித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் மேலும்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக யாழ். மாவட்ட இணை செயலாளர்களான சிவகுரு பாலகிருஷ்ணன், மற்றும் ஜயாத்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் கூறி
யுள்ளனர். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த மாதம் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டது. இப்பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கும்...
இவ்வருடத்திற்காக வரவு செலவு திட்டத்திலும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றய தினம் மொரட்டுவ பிரின்சஸ் ஒப் வேல்ஸ் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், அதிகளவாக கல்விமான்களை உருவாக்குவதே எதிர்கால நாட்டிற்கு முக்கிய தேவையாகும் எனக் குறிப்பிட்ட அவர்,...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு...
கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த வருடம் 2016ஆம் ஆண்டுடன்...
நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
