ஜெனீவாவில் இலங்கை மீண்டும் வாக்குறுதி அளித்தது

ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய...

யாழ்.கோட்டைக்குள் ராணுவத்தை அனுப்பியே தீருவேன் : ஆளுநர் குரே

வரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கையை செயற்படுத்துவதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியாக உள்ளார். அந்ந வகையில் வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டைக்கு அனுப்பிவைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர்...
Ad Widget

தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்குங்கள்: வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

“தேர்தலுக்கு முன்னர் நியமனங்களை வழங்கு” என வலியுறுத்தி, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கூடிய வேலையற்ற பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, கௌரவ பிரதமரே..! யாழ் வருகையின்போது தந்த வாக்குறுதிகள் எங்கே?, தேர்தலுக்கு முன் அபிவிருத்தி உத்தியோக நியமனங்களை வழங்கு…! போன்ற...

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பரசன்கஸ்வெவ - மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு...

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் என்ன? விளக்குகிறார் விக்­கி­னேஸ்­வரன்

நாமே தயா­ரித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக கைவி­டு­வ­தற்கு எமது தலை­மைகள் முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். இரா­ணு­வத்­தினர் போரில் வென்­றார்கள். எனவே எமக்கு எமது சட்­ட­ரீ­தி­யான நியா­ய­மா­ன­கோ­ரிக்­கை­களை அதன்­பொ­ருட்டு அர­சாங்­கத்­திடம் முன்­வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்­மவர் நினைத்தால் அது முற்­றிலும்...

மாவீரர் தினத்தை தேர்தல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம்: முன்னாள் போராளி காக்கா அண்ணன்

”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

அரச ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!!

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும் என்றும் சட்ட மா அதிபரின்...

பீதியில் யாழ். மக்கள்! வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலால் எட்டு பேர் படுகாயம்!!!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரண்டு மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் சங்குவேலி பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வாள்வெட்டுத்...

திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்கள் பேரவையில்...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின்...

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை பகுதியில் ஒருவர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தில் நின்ற...

அரச சேவைக்கான கட்டணங்கள் அனைத்தும் நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு!!!

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம்...

மீசாலை ரயில் விபத்தில் ஒருவர் பலி

யாழ். மீசாலை ரயில் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டது. மீசாலை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள புத்தூர் சந்திப் பகுதியில் உள்ள ரயில் கடவையை, மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட ஒருவரே, ரயிலில் மோதுண்டு உயிரிழந்து உள்ளார். இதில் உயிரிழந்தவர், சாரதியாகக்...

தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும்!! : சுரேஷ் பிரேமசந்திரன்

“புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் (வீட்டுச் சின்னம்), தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகத்தில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் மக்கள்...

தமிழ்த் தலைவர்களின் செயற்பாட்டால் அழிவுப் பாதையில் தமிழ் இனம்!! : சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு...

7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!: 135 பேர் பலி!

ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஈராக்கில் இன்று அதிகாலை ஹலாப்ஜா நகரம் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில்...

ததேகூவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஈபிஆர்எல் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலும், அண்மையில் வட...

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம்அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட சர்வதேச துறைமுகம் எக்காரணம் கொண்டும் சீனாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாத்தறை ஒருங்கிணைப்பு அழுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்ட...

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக குறைவடையும்!!!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று வீசக்கூடும் . வடக்கு , வடமேற்கு , மேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும். மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய...

ஈழத்தை உருவாக்க கனவு காண வேண்டாம் : ஜனாதிபதி

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts