தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும்...

நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ இடமளியேன் : ஜனாதிபதி

நாட்டைத் துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், “இன்று நாட்டிற்குத் தேவையாக இருப்பது மன்னராட்சி...
Ad Widget

யாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து! : பிரதமர் அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில், காலை 11 மணியளவில் ஆரம்பமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முண்ணனியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகைதந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தேர்தல் பரப்புரைகளுக்காக...

கொழும்பு வாழ் மக்களுக்கு சின்னத்தெரிவு சேவலாக தான் இருக்க முடியும் : டர்சன்

கடந்த காலங்களில் இனவாதம் பேசி மக்களை உசுப்பேத்தி வாக்குப்பெற்று மாநகரசபை உறுப்பினரானவர்கள் இதுவரை என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். கடந்த காலங்களில் வெறுமனே ஆசனத்தையும் தமது சட்டைப்பையையும் நிரப்பியவர்கள் மீண்டும் என்ன முகத்தோடு மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களில் இவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பல்வேறு வாக்குறுதிகளை...

வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியிலிருந்து சடலம் கண்டெடுப்பு

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொலை செய்யப்பட்டு, கடற்கரை பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கோமாளித்தன அரசியலுக்காவா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன? : மணிவண்ணன் கேள்வி

இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில்...

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.குறிப்பாக கடற்படையினரது வசமிருந்த கட்டுப்பாட்டு பகுதிகளினில் இந்நடவடிக்கைகள் துல்லியமாக கடற்படையின் விசேட பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. தீவத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரது என நம்பப்படும் உடல துண்டங்கள் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் : கஜேந்திரகுமார்

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எவ்வாறு சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ அதே போல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய...

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது. ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறைப் பொலிசாருக்கும்...

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : சுமந்திரன்

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். “நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்...

மாதகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்று (31) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண்...

வடக்கு- கிழக்கில் வன்முறைகளை கண்காணிக்க பொலிஸார் குவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலங்களில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் காரணமாக இவ்வாறு பொலிஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. மேலும் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். அதனைத்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட மக்கள் சந்திப்பு!

நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை இலக்காகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வண்ணார்பண்ணை – பெரியகடை வட்டார வேட்பாளர் ம.அருள்குமரன் தலைமையில், நீராவியடியில் அமைந்துள்ள...

ரட்ணஜீவன் கூலின் bigdeal பற்றி தேர்தல் ஆணைக்குழு விசாரணை நடத்த பணிப்பு.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்த வழக்கிற்கு பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூலின் நேர்மைத்தன்மையில் சந்தேகம் வெளியிட்ட நீதிபதி, அவர் எழுதிய...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நாளை யாழில்!

உள்ளுாராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்று, நாளை (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. ‘நிரந்தரத் தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளிலான குறித்த சந்திப்பு, யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ். மாநகர சபை வேட்பாளர் ம.அருள்குமரன்...

யாழில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. குறித்த இடங்களில் ‘சட்டமுரணான அறிவித்தல்’, ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம்! சட்டமீறலை எதிர்ப்போம்! போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் பிரசார நடவடிக்கைகளுக்காக தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள்...

வடக்கின் அடுத்த முதலமைச்சரும் விக்னேஸ்வரன்தான் :ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும்...

சுதந்திர தினத்தன்று பருத்தித்துறை- பொன்னாலை வீதி விடுவிப்பு!!

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பருத்தித்துறை-பொன்னாலை வீதி எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று முற்றாக விடுவிக்கப்படவுள்ளது. இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது. இதனால் பருத்தித்துறையில் வசிக்கும் மயிலிட்டி மீனவர்கள் கடந்த...

152 வருடங்களின் பின் இடம்பெறும் அபூர்வம்!!

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை புதன்கிழமை தென்படும் பௌர்ணமி தினத்தன்று இலங்கை மக்கள் பார்வையிடலாம். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பில் தெரிவிக்கையில், நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக...
Loading posts...

All posts loaded

No more posts