- Thursday
- May 14th, 2026
கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சிறுத்தையை உயிரிடன் மீட்கும் தமது பணிக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு விளைவித்தனர் எனவும் அரியவகை வன விலங்கை சித்திரவதைக்குட்படுத்தி சிலர் அடித்துக் கொண்டனர் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில காலத்திற்கு முன்னர் யாழ்.பல்கலைகழகதத்தின் முன்பாக எமது மகன் கடையொன்றினை...
தந்தை ஒருவர் தன் மகளைக் கத்தியால் குத்த முற்பட்டபோது அதனைத் தடுக்க முனைந்த முன்னாள் போராளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பொத்துவில், கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்றழைக்கப்படும் முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியைக் கத்தியால்...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சுப் பணிகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எனது தாய் நாட்டின் இறைமையைக் பேணிக் காப்பதுடன் சிரேஷ்ட...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவ புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கி 4 நாள்களுக்குள் கிளைமோர் குண்டு மற்றும் அதனை மறைந்திருந்து இயக்கும் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெட்டுப்புள்ளி முறைமையினால் சில மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் சிலர், வெட்டுப்புள்ளி விவகாரத்துக்கு தீர்வை வழங்கிய பின் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (19) அமைச்சரவை இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர்கள் சிலரால் இந்த யோசனை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர். சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம்...
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் கொடியுடன் மூவர் முச்சக்கர வண்டியொன்றில் பயணம் மேற்கொண்டவேளை அதனை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஏனைய இருவரும் தப்பி சென்றனர். இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும்...
தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6/2006 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வலுயுறுத்தி தபால் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கம்...
கிளிநொச்சி, அம்பாள் குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையொன்றை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அதனை அடித்துக் கொன்றுள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நுளைந்த சுமார் 4 அடி நீளமான குறித்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதுடன் இருவரை தாக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும்...
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (வியாழக்கிழமை) கைதடியில் இருக்கும் முதலமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு மாகாணங்களில் காணப்படும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்த 14 ஈழத் தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது....
அனைத்துப் பட்டதாரிகளையும் பாதிக்காத வகையில் அரச நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக தொழில் உரிமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நாடுமுழுவதுமுள்ள வேலையற்ற பட்டாரிகளில் 5000 பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதமும் அபிவிருத்தி உதவியாளர் நியமனம் வழங்க...
யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது...
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்....
புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்ட்டது. இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள்...
அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மற்றும் இனங்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை...
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றபோது, தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40...
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சித்திரவதைக்குள்ளாகிய இருவரும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்....
Loading posts...
All posts loaded
No more posts
