Ad Widget

யாழில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை விரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாக பந்தல் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6/2006 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வலுயுறுத்தி தபால் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ந்து 11 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

குறித்த போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள 24 ஆயிரம் தபால் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் தபால்கள் ஏற்றுக்கொள்ளல் மற்றும் விநியோகத்தல் பணிகள் முடங்கியுள்ளன.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், 654 தபால் நிலையங்கள் மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் நிலையங்கள் இதனால் மூடப்பட்டுள்ளன.

Related Posts