- Thursday
- May 14th, 2026
“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளது” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகும் இலங்கை குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு மீதான சுருக்க முறையற்ற விசாரணை...
“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்...
தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், எமக்கிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் (24) மாலை ஏற்பட்ட கைகலப்பு குறித்து, ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு...
தமிழீழ விடுதலைப் இயக்கத்தினால் (ரெலோ) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் குவியலொன்று ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், ரொக்கெட் லோஞ்சர், கண்ணிவெடிகள் என ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் தனிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு மத்தியில்...
“சுழிபுரம் பாணவெட்டை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி துன்புறுத்தல்களின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உடலில் உள்ள அடையாளங்களை வைத்து நம்பப்படுகிறது. எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும்” இவ்வாறு தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார்...
முல்லைத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோது, வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த இவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது...
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி நூலைப் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி...
கொக்குவில் தாவடி தெற்குப் பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர், கும்பல் ஒன்றால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரே இந்த முறைப்பாட்டை வழங்கியதுடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. “தாக்குதலுக்குள்ளான குடும்பத்தலைவரின் சகோதரியின் மகளை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக பிரச்சினை எழுந்தது....
ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமது தந்தை விடயத்தில் சிறந்த தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி கூறியபோதும், தந்தையை விடுவிக்காமை தமக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதென அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஆயுள் தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதனால் அவரது இரு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஜயசூரிய (வயது -26) மற்றும் சண் ருவான் (வயது – 26) ஆகிய இளைஞர்களே கத்திக் குத்துக்கு...
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என...
கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில 23,26,22 மற்றும் 24 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்...
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோருக்கே அந்த இடம் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில்...
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர், மதுபோதையில் பெண் பயணி ஒருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டில் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாங்குளத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் பெண் பயணி முறைப்பாடு வழங்க மறுத்ததால், பேருந்து நடத்துனர், இராணுவச் சிப்பாயை இறக்கிவிட்டு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ...
யாழ்.பல்கலைக்கழக வவுனியாவளாக முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவகை நடாத்திய பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் அனைவருக்கும் காலவரையறையற்ற வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் வவுனியாவளாக நிருவாகம் இந்த வகுப்புத்தடையை விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறாது என்பதுடன் வளாகத்திற்குள் வருவதற்கும் நிருவாகம்...
தமிழர் செறிந்து வாழும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லையென இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை நிராகரிப்பதாக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அதிருப்தியடைந்துள்ள சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் பொய்யான தகவல்களே எனத்...
பட்டதாரி பயிலுனர்களை அரச சேவைகளில் இணைப்பதற்காக கடந்த ஏப்பிரல் மாதம் பட்டதாரிகளுக்கு நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்விற் முடிவுகள் எதுவும் அறிவிக்காத நிலையில் 2 ஆம் கட்ட நேர்முகத் தேர்விற்கான பதிவு செய்தலுக்காக பிரதேச செயலகங்கள் ஊடாக அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சினால் கடந்த ஆண்டு முதற்கட்டமாக பட்டதாரி பயிலுனர்களை...
கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றதுடன், மேற்கொண்ட விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை,...
Loading posts...
All posts loaded
No more posts
