Ad Widget

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்துப் பட்டதாரிகளையும் பாதிக்காத வகையில் அரச நியமனம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக தொழில் உரிமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாடுமுழுவதுமுள்ள வேலையற்ற பட்டாரிகளில் 5000 பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதமும் அபிவிருத்தி உதவியாளர் நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 15 ஆயிரம் பேரை நியமிப்பதற்கு மீளவும் நேர்முகத் தேர்வு நடத்தத் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை ஒன்றுகூடிக் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து தொழில் உரிமை கவயீர்ப்புப் போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர்.

Related Posts