- Thursday
- May 14th, 2026
நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன் வேகவைக்க வழமையைவிட கூடுதலான நேரம் எடுக்கும். இவ்வாறான பருப்பு வகை விற்பனை...
கூரை மேல் ஏறி குறை கூறிப் பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது. அவரது கட்சி அவரை எதிர்க் கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்கின்றாரே அதைப் போன்றுதான் முடியாதது என்று எதுவும் இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதிலடி...
இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு 48 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள்....
ஐந்து வருடங்களாக அதிகாரங்களை சரிவரச் செயற்படுத்த முடியாத முதலமைச்சர், இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்பதை நம்ப முடியாது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில்...
வடக்கு மாகாண சபை தொடர்பாகவோ, முதலமைச்சர் தொடர்பாகவோ இறுதி தீர்மானம் எதனையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எடுக்கவில்லையென வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து...
புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா?...
முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக் கோரி இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் திடீரென அத்துமீறி நீரியல்வள திணைக்களத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற...
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்...
தொழில் முயற்சியாண்மையை ஆதரிப்பதை போன்று அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வாருங்கள் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ‘இலங்கை முயற்சியாண்மை’ தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) யாழில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து...
பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. அதனால் மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்”...
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னியன்குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் இடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து சிறுவனொருவரின் பாடசாலை பாதணி ஜோடியொன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் 8 அடி ஆழமான குழியொன்று...
வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறையே இவ்வாறு காலவறையற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஆவா குழு...
சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வானது இந்துக் கல்லூரியில் நேற்று(புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. மேலும், இதன் போது யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது. கடந்த...
வவுனியா பறன்நட்டகல் பகுதியில் குடும்ப பெண் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட இருவரை வவுனியா ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பறன்நட்டகல்லில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 28 வயதுடைய குடும்ப பெண் குளித்துக்கொண்டு இருக்கும் போது, குறித்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் இலட்சனையை பயன்படுத்திய இருவரை 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த தினேஸ்குமார் மற்றும் விதுஸன் என்ற இருவரும் பயங்கரவாத...
யாழில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். குடாநாட்டில் இனந்தெரியாதோரால்...
வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசத்திற்கு மத்தியில், தற்போது அரங்கேறிவரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களால் யாழ். மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். யாழ். அராலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வட்டுக்கோட்டையிலும் பொதுமக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று கடும் பதற்றம் நிலவியதுடன், மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக...
யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டாசகம் நேற்று இரவும் அரங்கேறியுள்ளது. தென்மராட்சி- சரசாலை தெற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வாள்களுடன் குறித்த பகுதியின் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டையும், அங்கிருந்த உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். கனடா...
யாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ் கோட்டையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, கோட்டைப் பகுதியில்...
Loading posts...
All posts loaded
No more posts
