- Wednesday
- May 13th, 2026
சாவகச்சேரி நகர் ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்தியுட்ட் புகுந்த கொள்ளையர் ஒருவர், பணியாளரை அச்சுறுத்தி சுமார் 18 லட்சத்து ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து...
புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. புத்தரின்...
கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில்...
யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை...
வடமராட்சி கிழக்குக் கடலில் கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் பிரதேச மீனவர்களால் திட்டமிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மடக்கிப் பிடித்த மீனவர்களை வைத்து உரிமையாளர்களை இனங்காண பிரதேச மீனவர்கள் திட்டமிட்டபோதும், பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுச் சென்றனர். வடமராட்சி கிழக்குக் கடலில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றமையை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற...
சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, அரசாங்கம்...
சுழிபுரரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில்...
பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை...
இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலகின் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் அனுசரணையில் யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களை கையளிக்கும் நிகழ்வு, தமிழக அமைச்சர் செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன் நேற்று...
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்...
வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது. இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்தியை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிலைய அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள முதலாவது திட்டமாக இது...
யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு, யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழ் நாட்டு அரசாங்கத்தால் யாழ். பொது நூலகத்திற்கு வழங்கப்பட்ட ஐம்பதாயிரம்...
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை, அங்கு வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து செல்ல...
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி கடந்த 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
யாழ்ப்பண மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டு மடங்காய் உயர்ந்துள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 5.7 சத வீதமாக இருந்த யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 2016 ஆம் ஆண்டு 7 சதவீதமாக அதிகரித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 10.7...
வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (17.09.2018) காலை வழங்கி வைத்துள்ளார். நிர்வாக பிரதிப்பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமயில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன முதலமைச்சர் அமைச்சின் செயலாளர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பொங்குதமிழ் நினைவுத் தூபி திறக்கப்பட்டது. திரை நீக்கப்பட்ட தும் தமிழீழ விடுதலைப் புலி களினால் வெளியிடப்பட்ட தேசிய கீதமான ”ஏறுது பார் கொடி ஏறுதுபார்” என்கிற பாடல் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து புலிகளின் எழுச்சிக் கீதங்களும் ஒலிபரப்பப்பட்டன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம்...
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 72 ஆவது நாளாக நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடூரமாக காணப்படுவதாகவும்,...
Loading posts...
All posts loaded
No more posts
