Ad Widget

பலாலி விமான நிலையம் இந்திய விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி!

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்தியை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இந்திய விமான நிலைய அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள முதலாவது திட்டமாக இது அமையவுள்ளதுடன், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராகவிருப்பதாக அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அதிகார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 120 விமான நிலையங்கள் இந்திய விமான நிலைய அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts