- Wednesday
- May 13th, 2026
இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்றைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட...
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்வி–மணலாற்றில் தொடங்கியசிங்களக் குடியேற்றம் மகாவலிஅதிகாரசபையால் தொடர்ந்துநடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகக்...
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா...
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 6 பிரேரணைகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மாகாணசபையால் இதுவரை 437 பிரேரணைகளும் 19 நியதிக்...
“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா?” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உண்ணாவிரத...
யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர்....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல –...
வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வீரபுரத்தில் இருந்து ஒமந்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் கொக்கெலிய முகாமில் இருந்து இராணுவத்தினரை ஏற்றி வந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய...
கொக்குவில் பகுதி இன்றும் விசேட பொலிஸ் அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டு, வீடுகளுக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்வதாகவும், பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில்...
மட்டக்களப்பு கல்வியற்கல்லூரி மாணவனின் சடலம் கல்லூரி விடுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், கல்வியற்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக...
யாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கியுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் அவதானித்து அதனை சீர் செய்யுமாறு...
யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்தவர் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்று உள்ளது. குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டுள்ள...
யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது. பாராட்டு விழாக்குழுத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்...
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது மேலும் பலமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று (09) வட அகலாங்கு 14.30 பாகை மற்றும் கிழக்கு நெடுங்கோடு 87.50 பாகைகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 950 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...
தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த காவல்துறை பிரிவுக்குள் மாத்திரம் 15 வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மல்லாகத்தை அண்மித்த பகுதியில் காங்கேசன்துறை பிரதான வீதி வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த...
அண்மையில் உயிரிழந்த திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாதென வவுனியாவில் மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தம்மை அச்சுறுத்தியதாக மூன்று பெண்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அச்சுறுத்தப்பட்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், “போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பாக...
யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நினைவுத்தூபி அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸாரினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபியை புனரமைப்பதுடன்,ஏனைய சகல...
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மணித்தியாலயங்களில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை 5 லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள செய்தியிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், “அரபிக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்கின்றது. தற்போது சூறாவளியாக வலுவடைந்ததன் காரணத்தினால் இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
