Ad Widget

போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாது: சிறிரெலோ கட்சியினரால் பெண்களுக்கு அச்சுறுத்தல்!

அண்மையில் உயிரிழந்த திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய போதநாயகியின் விடயத்தில் தலையிடக் கூடாதென வவுனியாவில் மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தம்மை அச்சுறுத்தியதாக மூன்று பெண்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அச்சுறுத்தப்பட்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பாக அவரது தாயார் பொது அமைப்புகளுக்கு விடுத்த அழைப்பின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டிற்கு சென்றிருந்தோம்.

பெண்கள் விடுதலைச் சிந்தனை அமைப்பின் ஊடாக நாம் அங்கு சென்றிருந்தோம். அங்கு பலதரப்பட்ட சமூக ஆர்வலர்களும் வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவர் தொடர்பாக பலதரப்பட்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வை முடித்து நாம் எமது இல்லத்திற்கு திரும்பும் போது எமக்கு பலவாறாக மிரட்டல் விடுக்கப்பட்டது. சிறிரெலோ இளைஞர் அமைப்பின் தலைவர் எம்மை அங்கு செல்ல வேண்டாம் எனவும் எதற்காக அங்கு சென்றீர்கள் போதநாயகியின் விடயத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் எனவும் அஸ்மின் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு ஏன் அங்கு வந்தார் என இனவாதத்தினை கிளப்பும் விதமான பேசினார்.

எனவே இதனை கண்டித்தும் இதனை பதிவு செய்யும் முகமாகவும் நாம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வந்து ஒரு முறைப்பாட்டை செய்துள்ளோம்” என தெரிவித்தனர்.

Related Posts