- Friday
- May 8th, 2026
நீர்கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை...
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27 நாள்கள் திருவிழா...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை (இன்று) ஆரம்பமாகவுள்ள, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய...
நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம்...
நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. அந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள்...
மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை...
வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனை முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்த முறை தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. அத்துடன், மனுதார்ரான பா.டெனீஸ்வரனுக்கு வழக்குச் செலவை வழங்குமாறு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டது. வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சுப் பதவியிலிருந்து முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்...
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கையில் சிறியளவிலான தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இந்தநிலையிலேயே, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆராய்ந்தனர். அடியவர்களைச் சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பதற்கு வசதியாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் 3 லட்சம் ரூபா செலவில் 8 சோதனைக் கூடங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட போதும் மேலதிகமாக...
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-...
"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும்...
நாட்டின் சில பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு...
போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3...
“வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் தாழ் அமுக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் அடுத்த சில தினங்களுக்கு புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தல் காற்றின் வேகம் அடிக்கடி 55 கிலோமீற்றர் தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்....
நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறு பணித்திருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா். அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர்...
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும்...
முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சம்பவ தினத்தன்று பாடசாலை...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர். இந்தக் குளவிக் கூட்டை அழிப்பதற்கு யாழ்ப்பாணம்...
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகரத்தில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதும் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச வடக்கிற்கு வந்து கூறுவதானது உண்மைக்குப் புறம்பான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுடன் உண்மைத் தன்மையோ நியாயமோ இல்லாத அவருடைய இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சின்னப் பையனான...
Loading posts...
All posts loaded
No more posts
