நீர்கொழும்பில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.