- Friday
- May 8th, 2026
வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக பாதிப்புகளின்றித் தப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உடுவில் கந்தேரோடை...
புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி...
முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த கவனயீா்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனா். இதன்போது ‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’,...
தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லூரில் தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுக்கு வசதியாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தூபிக்கு முன்பாக...
கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான நிரோசன் வின்சியா (வயது 26)...
சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது. ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ரயில் சாரதிகள், உதவியாளர்கள் , ரயில் நிலைய அதிபர்கள் , சமிஞ்ஞையாளர்கள், பாதுகாவலர்கள் என 15 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசநேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று...
தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே இவ்வாறு 32 அடி உயரத்தில் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (வியாழக்கிழமை) வடக்கு...
நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது நீதித்துறைக்கும், ஜனநாயகத்திற்கும் விழுந்து பேரிடி என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுனரின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் அமைதி...
தியாக தீபன் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் இன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும் தமிழ் மக்களின் வேணவாக்கள் வெற்றி பெறவும் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றினையுமாறு...
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தததும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பல்கலைக்கழக தகுதிவாய்ந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க செயலாளர் மகேந்திர ஜெயசிங்க...
பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும்...
யாழ்ப்பாணம் நகரில் வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் வீழ்ந்த சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்...
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்....
இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மோதலை ஏற்படுத்த நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடலை தகனம் செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்து...
எம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் விடுமுறைகளும் வீணாகிப்போயுள்ளன. 30 ஆண்டுகால யுத்த சூழ்நிலைகளால் தமிழர்...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை...
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெளத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று முழுதாகவே இல்லாதொழிக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையினால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட...
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரர் உட்பட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளபோதும் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள், பொதுமக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
