Ad Widget

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – நாவற்குழியில் அலையெனத் திரள அழைப்பு

தியாக தீபன் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் இன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும் தமிழ் மக்களின் வேணவாக்கள் வெற்றி பெறவும் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றினையுமாறு அவர் கேட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தில் வவுனியாவில் ஆரம்பித்து நடத்தப்படும் நடைபயணம் நேற்று காலை எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து புறப்பட்டு மாலை நாவற்குழியை வந்தடைந்தது.

இன்று 26 ஆம் திகதி இறுதி நாள் அன்று நாவற்குழி பகுதியில் இருந்து நடைபணயம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி நோக்கி முன்னெடுக்கப்படுகிறது. எனவே காலை 8 மணியளவில் அலையேன தமிழ் உறவுகள் அனைவரும் நாவற்குழியல் ஒன்று கூட வேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுள்ளார்.

அங்கிருந்து புறப்படும் நடைபயணம் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் தியாக தீபம் திலீபன் உயிர்கொடை வழங்கிய இடத்தினை வந்தடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Posts