- Sunday
- May 3rd, 2026
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்ற நபராவார். அப்படியானவர் தியாக தீபம் திலீபனைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கு ஒரு வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது. “சாத்தான்கள் வேதம் ஓதக்கூடாது”. இவ்வாறு சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “அரசியலுக்காக திலீபனை எல்லாம்...
நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினமாகும். இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆகவே, பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்களே...
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக Meegahalande Durage Lamawansa மேலும் கூறியுள்ளதாவது, “நான் இலங்கையிலிருந்து மாஸ்கோ...
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி பிரதேசத்தில் நடந்துள்ளது. கிளிநொச்சி, அக்கராயனில் இருந்து பெண் ஒருவர் பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். பஸ் வாசலின் அருகில் இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்த நிலையில், பஸ் சடுதியாக பிறேக் அடித்து நிறுத்தப்பட்டுள்ளது. வீதியில் குறுக்கே...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே புதிய பேச்சாளர் மற்றும் கொரடா பொறுப்புக்கள் இறுதிசெய்யப்படும். இன்று (22) கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும் என முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், அவர் நாடாளுமன்றத்திற்கு வரும்...
வடக்கு – கிழக்கில் உள்ள 2 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு ஆயுட்காலம் தடை விதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், யாழ்ப்பாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களே இந்த வாழ்நாள் தடையை எதிர்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்க்கப்படும் என நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில்...
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மூத்த பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக (டி.ஐ.ஜி) பதவி உயர்வு செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 9 பெண் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களின் (எஸ்.எஸ்.பி), பெயர்களை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன தேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதிப் பொலிஸ் மா...
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...
வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் நிசா விக்டரால் மறைத்து...
பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. அத்தோடு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்...
வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்கலைகழகத்திற்குள் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்து வந்துள்ளது. கொரோனாவிற்கு பின்னர்...
உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை...
“நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சபையின் செயலாளர் முழு மூச்சாக வேலைகளை செய்து வரும் நிலையில் யாழ்.மாநகர சபையின் ஊழியர் அவரை அலுவலகம் தேடி வந்து தாக்கியமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் சார்பில்...
பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். “சிறுவன் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு பாம்பு தீண்டியுள்ளது. அதனை தாயாரிடம்...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பல்...
தமிழர்களின் போராட்டங்களை – விடுதலையை எதிர்கால சந்ததிகள் அறிய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோமோ என்று இருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நீதிமன்றத் தடையை பொலிஸார் பெற்றுக் கொண்டதன் இளம் சமுதாயமும் உலக நாடுகளும் எங்களுடைய போராட்டங்கள் தொடர்பாக இங்கு நடந்தவையை அறிந்துள்ளது என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும்...
Loading posts...
All posts loaded
No more posts
