தேர்தலின் பின்னர் இராணுவத்தினரை சீண்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. -இராணுவத் தளபதி

எமது இராணுவம் மிக அர்ப்பணிப்புள்ளவர்கள் என்பதுடன் அவர்கள் எமது நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் அதனை தடுப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளனர்' எனஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இராணுவ வீரர்களுடனான சந்திப்பின்...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

13ம் திருத்தத்திற்கு அப்பால் வடகிழக்கு இணைந்த தீர்வினை நாடுமா வடமாகாணசபை?: பீடாதிபதி எஸ்.சத்தியசீலன்

புத்திசாலித் தனமான வகையிலே 13வது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று வட கிழக்கு இணைந்த சமஷ்டி மூலமான ஓர் தீர்வை முன்வைப்பது இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும் சிறந்தது என யாழ்.பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் பீடாதிபதி எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பட்ட துன்பங்களின் எதிர்விளைவாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை...

யாழில் மகனை தாக்கிய பொலிஸாரைத் தடுக்க முயன்ற தாய் மீது கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணம் குடத்தனை வடக்கினைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மீது ஆண் பொலிசார் கொடூரமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.திருமதி யோகராசா கமலாதேவி (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் மகனான யோகராசா கஜேந்திரன் (வயது 19) மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, குடத்தனையிலுள்ள அவரது வீட்டிற்கு வாகனத்தில் கொண்டு வந்த...

செய் அல்லது செத்து மடி இதையே மனதில் நிறுத்துக; – அமைச்சர் குருகுலராஜா

உன்னால் முடிந்தால் செய்; அல்லது செத்துமடி'' என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் தினமும் வையுங்கள். எமது பூமி சுதந்திரக் காற்றை உள்ளேயும் வெளியேயும் இழுத்துவிட வைக்க நீங்கள் தயாராகுங்கள் (more…)

வட மாகாண அமைச்சர் – இந்திய துணை தூதுவர் சந்திப்பு

வட மாகாண போக்குவரத்து மற்றும் கடற் தொழில் அமைச்சர் பி.டெனிஸ்வரனிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் வே.மகாலிங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. (more…)

வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் கொழும்பில் இருவர் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என...

13 பிளஸ் 13 மைனஸாக மாறிவிட்டது: சிவாஜிலிங்கம்

13 பிளஸ் பிளஸ் 13 மைனஸ் ஆக மாறிவிட்டதாக தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) அரசியல் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் பெப்சி கொக்கோ கோலாவுக்கு தடை! அமைச்சர் அதிரடி!

விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார். நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை...

இராணுவம் தொடர்ந்து மக்களுக்கு உதவும்: யாழில் இராணுவத்தளபதி

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். (more…)

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில்...

புளொட்டின் உறுப்பினர்கள் தனியே சத்தியப் பிரமாணம் செய்தனர்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை...

நிலையான அபிவிருத்தி நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் – பொ.ஐங்கரநேசன்

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் (more…)

வடமாகாண அமைச்சர்கள் மூவர் இன்று பதவியேற்றனர்

வடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். (more…)

மக்களின் உரிமை பிரச்சினைக்கே முன்னுரிமை – ஆயர் இராயப்பு ஜோசப்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

பொதுநலவாய மாநாட்டுக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தவுள்ளதை தமது கூட்டமைப்பு எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் பதிவு!

காணாமற்போனோரின் உறவுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)

முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியப்பிரமாணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். (more…)

வட மாகாண முதலமைச்சர் – யாழ். முஸ்லிம்கள் சந்திப்பு

யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை சந்தித்துள்ளார். (more…)

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts