Ad Widget

பாப்பரசர் வருகை: அரச விடுமுறை

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?

மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...
Ad Widget

புலிக்கொடி எங்கும் இல்லை : ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்­பாணம் மற்றும் வடக்கில் எந்­த­வொரு அசம்­பா­வி­தங்­களும் நடை­பெ­ற­வில்லை என, தான் மகா­நா­யக்க தேர­ரிடம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார். நேற்று கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். தற்­போது அந்தப் பகு­தியில் அமைதி நில­வு­வ­தா­கவும் இது­கு­றித்து காலை யாழ்ப்­பா­ணத்­திற்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் தக­வல்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்....

ஜனாதிபதி மைத்திரிபால கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.

வடக்கு மக்கள் யாழ்தேவி ரயிலைக் கோரவில்லை, அரசியல் அதிகாரத்தையே கோரினர் – டிலான் பெரேரா

வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு...

பாப்பரசர் வருகைக்காக விசேட பஸ் சேவை

புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள அனைத்து சாலைகளிலிருந்தும் மடுவுக்கு செல்லும் பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் திங்கட்கிழமை (12) தெரிவித்தார். இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (13) வருகை தரும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புதன்கிழமை (14)...

செந்தில் தொண்டமான் சரணடைந்தார்

பிடியாணை பிடிக்கப்பட்டிருந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீகாமன் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் ஆர்யா

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து மீண்டும் இயக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி....

விநியோகஸ்தர்கள்தான் லிங்கா படத்தை கொன்றுவிட்டார்கள்: தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு உண்ணாவிரத...

தேசிய அரசில் கூட்டமைப்பு பங்கேற்காது! வெளியிலிருந்து முழுமையாக ஆதரிக்கும்!! – சம்பந்தன்

அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...

லொத்தர் கடை தீ வைத்து எரிப்பு

வடமராட்சி, நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள தேசிய லொத்தர் விற்பனை கடை ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இனம்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்காரணமாக, கடையிலிருந்த லொத்தர்கள், இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைகலப்பில் இ.போ.ச. சாரதி காயம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி வழித்தட சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இருவருக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற கைகலப்பில், பேருந்து சாரதி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அம்பன் குடத்தனையை சேர்ந்த சுப்பிரமணியம் வசந்தகுகன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே...

புதிய ஜனாதிபதிக்கும் த.தே. கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...

மொஹான் பீரிஸை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகக்கோரி புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைக்கவும் : ஐ.தே.க எம்.பி.க்கள் கோரிக்கை

புதிய அரசின் அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றில் புதிய அரசின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின்...

மஹிந்தவும் சந்திரிகாவும் எம்.பி.களாகும் சாத்தியம்?

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொழும்பில்...

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!

உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா- நியூஸிலாந்தில் வரும் பெப்ரவரி மாதம் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது. இதற்கான இலங்கை அணியே நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சத்திர சிகிச்சை செய்திருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவும் இடம்பெற்றுள்ளார். அணிவிவரம்:- ஏஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், குமார்...

ஆஸியிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் சாவு!

நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்திவந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றையவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது -...

போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பா.டெனீஸ்வரன்

பாப்பரசர் வருகையை முன்னிட்டு நாளை 13ஆம் திகதி, போக்குவரத்து சபையினர் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். பாப்பரசர் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் விசேட போக்குவரத்து சேவைகளை தனியார் போக்குவரத்து சேவைகள், இலங்கை போக்குவரத்து...

இந்திய அரசின் நிதியுதவியில் விவசாயம், பொறியியல் கற்கை பீடங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...
Loading posts...

All posts loaded

No more posts