Ad Widget

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

யாழ்ப்பாணம் வந்துள்ள கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இன்று வெள்ளிக்கிழமை மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரில் பார்வையிட்டார். இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர். காங்கேசன்துறை துறைமுகத்தை...

இலங்கை குறித்த விசாரணையில் மாற்றமில்லை!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் மாற்றம் இல்லை என்பதே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என, அவரது பேச்சாளர், ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்குள்...
Ad Widget

கையெழுத்து போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்படுகின்றது. 'குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!', 'காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விபரங்களை வெளிப்படுத்து!' மற்றும் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்!' ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடளவிய...

போலி ஆவணங்களுடன் காணிகள் வழங்கிய டக்ளஸ், விமல் – விஜயகலா

யாழ்ப்பாணம், நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளன என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். நாவற்குழி மேற்கு புதிய குடியிருப்பு மக்களை வியாழக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு...

இனப்படுகொலை பிரேரணையை திரும்பப்பெற வேண்டும் ; எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணையின் தீர்மானத்தை மீளப்பெற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் மாகாணசபைக்கு இல்லையென்பதால் இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய அரசின் நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே...

உள்ளக விசாரணையே அரசாங்கத்தின் நோக்கம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணை மேற்கொள்வதை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளக விசாரணையை செய்வதையே எதிர்பார்க்கிறது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இன்று உலக வானொலி தினம்!

உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பிக் கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010...

கண்கவர் உலக கோப்பை தொடக்க விழா!

உலக கோப்பை தொடக்க விழா நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. ஒவ்வொரு நாட்டுகுழுவும் தங்களது கலைநிகழ்ச்சிகளை திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பு நிகழ்த்தி காண்பித்தனர். இலங்கை சார்பில், எமது நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலையில் கிரீடம் வைத்துக் கொண்ட பெண்கள் இரு குழுவாக...

தாஜ்மகால் அருகே ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் உள்ளது. இதை நாட்டின் நினைவுச்சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தாஜ் மகாலின் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு...

இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச்சில் வெளியாகாது! – மங்கள

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியாவதை தடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் வாசிங்ரனில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த அறிக்கையை எப்போது வெளியிடுவது என்ற முடிவை எடுப்பது...

இடர்கள் வந்தாலும் மண்ணின் வாசனை மாறாமல் வாழ்க்கை நடத்த முடியும் – எஸ்.சிறிதரன்

நாங்கள் அறநெறி பண்பாடுகளிலும் மொழி, கலாசார விழுமியங்களிலும் நல்லதொரு அத்திபாரத்தை பெற்றுள்ளோம். இதன் விளைவாக எத்தகைய இடர்கள் வந்தபோதும் இந்த மண்ணின் வாசனை மாறாமல் எங்களால் வாழக்கை நடத்த முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடமராட்சி, கரவெட்டி விக்னேஸ்வரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி, அதிபர்...

மேலும் 10 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் மேலும் 10 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. சதொச ஊடாக கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதியே இன்று முதல் இந்த விலை குறைப்புக்கள் செய்யப்படவுள்ளன. அதன்படி, குறைக்கப்பட்ட பொருள்களின் விலைகள் பின்வருமாறு சீனி – 83 ரூபா கோதுமை மா– 87 ரூபா நெத்தலி – 384...

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே “இனப்படுகொலை” தீர்மானம்- விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி சுதந்திரதின...

கையில் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும்

கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்புணர்த்தியுள்ளது. உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி...

வலிகாமம் நிலத்தடி நீர் பிரச்சினை: கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு - வௌ்ளவத்தை...

த.தே.கூ.வை பதிவு செய்யக் கோருவது ஆரோக்கியமான மாற்றம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டாமென முன்பு எதிர்த்தவர்கள், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டுமென கோருவது, ஆரோக்கியமான மாற்றம் என, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம். ‪‎வளலாயில்‬ முதல் கட்டம் ஆரம்பம்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது, என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களுக்கு வாகனங்களை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்கெனப் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை (11.02.2015) நடைபெற்ற வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் வாகனங்களைக் கையளித்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு உட்பட்ட கால்நடை அபிவிருத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் வாகனங்களுக்குப் பற்றாக்குறைவு...

உள்ளூராட்சி ஆணையாளருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஜெகூவுக்கு உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முகாமைத்துவ உதவியாளர், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின்...

ஆஸியில் இருந்து நாடு திரும்பியவர் புலனாய்வு துறையினரால் கைது

அவுஸ்ரேலியா இருந்து இலங்கை வருகை தந்தவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து கடந்த 2012 /8/12 படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று இரண்டரை வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு திரும்பி வந்தவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு...
Loading posts...

All posts loaded

No more posts