- Monday
- May 18th, 2026
அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள்...
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம்,...
நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் பின்னர்,...
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...
19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக 30 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதாயின் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்நிலையில் இதுதொடர்பில் 3ம்திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மீதான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். முன்னதாக இது பற்றி எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது ”அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...
கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (04.09.2015) இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வடமாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு, தலைவரவர்களே, விசேட அதிதி அவர்களே, மாகாண உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, இவ்வருடத்தைய மாகாண கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது தொழில்த்துறைத்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டுக்கு மாற்றம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து கோபுரத்தில் உள்ள நவ கலசத்திற்கும் அபிஷேகம் செய்ய நவ கும்பங்கள் சிவாச்சாரியார்களின் மந்திர ஓதல்களுடனும் மங்கள வாத்தியங்களுடனும் கும்பங்கள் வெளி வீதி...
இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:, கடந்தமாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன்...
சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து...
யாழ். மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட காசநோய் கட்டப்பாட்டு அதிகாரி ஆர். மாணிக்கவாசகன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் காசநோயின் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது. அதேவேளை ஒன்று தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம்...
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது.இதனிடையே, தேசிய அரசாங்கத்தின் 48 அமைச்சரவை அமைச்சர்கள் 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை 127 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. யோசனைக்கு ஜே.வி.பி, தேசிய சுதந்திர முன்னணி,...
பொலிஸ் அதிகாரியொருவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதேசப் பொறுப்பாளருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவரை நிரபராதி என தீர்ப்பளித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுதலை செய்தார். கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி இணுவில் பிரதேசத்தில் யாழ்.பொலிஸ் அத்தியட்சகரான சாள்ஸ் விஜயவர்த்தன என்பவரை கொலை செய்தார்...
இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை...
குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும்...
வடமராட்சி வதிரிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வரும் மாணவிகளுடன் சேஷ்டை செய்த 4 பேரையும் 4 மணித்தியாலங்கள் நீதிமன்ற வளாகத்தைத் துப்பரவு செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, நேற்று வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த 4 பேரும் முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று மாணவிகளுடன் சேஷ்டை புரிந்து வருவதாக பருத்தித்துறை...
ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது...
Loading posts...
All posts loaded
No more posts



