- Tuesday
- May 19th, 2026
சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இது சர்வதேச விசாரணையில்லை என்று கூறி இந்த அறிக்கைக்கான பிரேரணையை ஜெனிவாவில் எரித்து, சர்வதேச ஒரு கூட்டத்தினர் மக்களைக் குழப்பினர். இப்போது புரிந்திருக்கும், நடந்தது சர்வதேச விசாரணைதான் என்று. நேற்றுவரை எம்மை ஏசி விட்டு இன்று மகிழ்ச்சி தெரிவிப்பவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக்...
பூகம்பம் ஏற்பட்ட நாடு என்னவென்று கூடத் தெரியாமல் நீர் எல்லாம் வரலாற்று ஆசிரியராக இருக்கின்றீர்களா? என்று அதிபர் ஒருவர் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை ஒருவரை திட்டிய சம்பவம், யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பாடசாலையொன்றில் வியாழக்கிழமை (17) நடைபெற்றுள்ளது. சிலி நாட்டில் 8.30 ரிச்சர்ட் அளவில் புதன்கிழமை (16) பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் வரலாற்று...
நச்சுப் பொருட்களை உட்கொண்ட, திரவங்களை அருந்திய, விஷ ஜந்துக்களின் கடிக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவி செய்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.சிவன்சுதன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம்...
தற்கொலைக்காக நஞ்சருந்துதல் தற்போது அதிகமாகியுள்ளது. அதிலும் இளம் சமுதாயத்தினர் நஞ்சருந்துதல் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களின்படி தெரியவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை உளவள வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவயோகன் தெரிவித்தார். நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை...
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வரவேற்றுள்ளார். அத்துடன் நீதியை நாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த...
ரஜினி, திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க போகிறார் என்று வெளியான செய்தியை அடுத்து இந்து முன்னனி மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த...
கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார். பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக்...
இந்திய ரோலர் படகின் அத்துமீறலை கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள சமரவீர இந்தத் தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி...
சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான...
ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM) முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் அறிக்கையினை வரவேற்பதோடு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக...
தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை, இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணை சரவணைப்பதி சிறி செல்வக்கதிர்காம தேவஸ்தானத்தின் கும்பாபிசேகம்...
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜயவர்தன ஆகியோரை, துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனம்...
5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆரப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். திவுலப்பிட்டிய நகரில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பொலிஸ் அதிகாரி...
நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன. நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும்...
இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல் தெரிவு...
2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை...
கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. பிரமந்தனாற்று வடிநிலத்தின் குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற மறுவயற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக...
Loading posts...
All posts loaded
No more posts
