- Wednesday
- May 20th, 2026
'சிறைக்கைதிகளும் மனிதர்களே' என்ற தொனிப்பொருளின் கீழ் சிறைக்கைதிகளை உரிமைகள் மற்றும் சலுகைகளுடன் தடுத்து வைப்பதற்கு உகந்த சுற்றாடலுடனும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய சிறைச்சாலை கட்டடத்தொகுதி சனிக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, சிறைச்சாலைக்கான புதிய கட்டடத்தினை...
தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும்...
"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை...
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல் தேவ், தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்ற ‘ஆலுமா......
பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய்...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியவர் வீரேந்திர சேவாக். இவர் தனது பிறந்த நாளான கடந்த 20-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சச்சினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் விளையாடியபோது கிளார்க் தொடர்புடைய ஒரு சம்பவத்தை தற்போது...
யாழ். நகரில் இயங்கும் பல உணவகங்களிலும் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும் இது விடயத்தில் சுகாதாரப் பிரிவினர் கண்டும் காணாதபோக்கில் செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ். புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுக்குள் தீக்குச்சி காணப்பட்டதுடன், இறைச்சியில் அகற்றப்படாத இறக்கையும் காணப்பட்டதாக...
212 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியுள்ளது. ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. எகிப்து எல்லையை கடந்து ரஷ்ய நோக்கி சென்ற போது சினை பெனிசுலாவில் சார்கோ...
வெளிச்சத் திருவிழா என்றுக் கூறப்படும் " ஹாலோவியன்" அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவின் தீபாவளி ஆகும். இறந்த பிறகு சொர்க்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் இந்த "ஹாலோவியன்". இதுபோன்ற கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான...
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று காலை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான, புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த...
2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை...
தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை...
“இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.'' - இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்...
"யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் நிலக்கீழ் நீரில் கலந்துள்ள விடயம் தொடர்பில் கனிய எண்ணெய் அமைச்சினூடாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர்...
அவுஸ்திரேலிய நகர் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவர் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகரின் மேயராக இலங்கைப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பிறந்த குறித்த பெண் யுத்தம் காரணமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து சமந்தா...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ப்ரீடம் ஹவுஸ் எனும் அமைப்பு சர்வதேச ரீதியான இணையத்தள பாவனை சுதந்திரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் இலங்கையர்களுக்கு இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக...
போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ம் திகதி நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நோர்வேயின்...
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு கொழும்பில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்...
கிளிநொச்சி, பூநகரி சங்குப்பிட்டிப் பாலப் பகுதியில் சமூகச்சீர்கேடான விடயங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பிரதேச சபை இணைந்து செயற்படவேண்டும் என பூநகரி பிரதேச செயலர் சி.த.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார். இவ்விடயத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக கூறினார். சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஒரு சுற்றுலா மையப்பகுதியாக மாறிவரும் நிலையில் சமூக சீர்கேடுகள் நிகழ்வதற்கான...
Loading posts...
All posts loaded
No more posts


