Ad Widget

கோலாகலமாக நிகழ்ந்தேறிய வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி

வடமாகாண மரநடுகை மாதத் தொடக்க நிகழ்ச்சி யாழ்ப்பாணம் செம்மணி உப்பாற்றங்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) கோலாகலமாக நடந்தேறியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாயéர்வமாக மரக்கன்றுகளை நாட்டி வைத்ததோடு, மர நடுகைப் பாடல் இறுவட்டையும் வெளியிட்டு வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறீதரன், த.சித்தார்த்தன்; மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகளோடு பெரும் எண்ணிக்கையில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’ என்ற மகுடவாசகத்துடன் வடமாகாண சுற்றாடல் அமைச்சால் கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் வடமாகாண மரநடுகை மாதத்தின் நடப்பு ஆண்டுக்குரிய கருப்பொருளாக ‘ஐந்து மாவட்டங்கள் ஐந்து இலட்சம் மரக்கன்றுகள்’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts