- Saturday
- June 13th, 2026
தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
மல்லாகம் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய யுவதியை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என அவரது தந்தையால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து தனது வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தவர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் எங்கும் தேடி யுவதியை காணாத நிலையில் அன்றைய தினம் இரவு பொலிஸில் முறைப்பாடு...
அரச பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பொன்றுக்கு 35ஆக மட்டுப்படுத்தியிருப்பது நியாயமற்றது எனவும், அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அனுமதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டதால் எஞ்சியுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்கள் இந்த 35 மாணவர்கள் கட்டுப்பாட்டால் தமது...
வேகமாகச் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கிணற்றுக்கட்டுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கிணற்றடியில் இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சோந்த வின்சன் வின்ஐக்சன்...
இதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நகர சபை மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு...
ரஜினி நடித்த படங்களை ரீமேக் செய்வது, அவர் நடித்த படங்களின் தலைப்புகளை வைப்பது சமீபகாலமாக டிரெண்ட்டாகி வருகிறது. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. அதன்பின் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் ஓரளவே வெற்றி கண்டனர். இந்நிலையில், ஆர்யாவும்...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...
பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை...
கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பதுண்டு. ஆனால், சில நேரங்களில் பீல்டிங் செய்யும்போதும் பேட்டிங் செய்யும்போதும் பந்து தலையை தாக்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில், தலையை பந்து தாக்கிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் இப்போது நடந்துள்ளது. மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் கொண்ட லீக் தொடர்...
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள அனெம்ப்ரா மாநிலத்தின் நேவ்வி பகுதியில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில்...
கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 188 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக சிறிவர்தன 66 ஓட்டங்களையும், குலசேகர 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 49 ஓட்டங்களுக்கு 4...
விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு...
காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை யாழில் இரண்டு விசாரணை அமர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த அமர்வுகள் இடம்பெற்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேச...
இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்நிலையான நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. இந்த நிலையில், அவர் இலங்கையில் பல்வேறு முதலீட்டு...
முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை, திட்டமிட்ட படுகொலையாகவே தான் உறுதியாகக் கருதுவதாக மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தின நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து அடையாளந் தெரியாதோரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட...
இசைஞானி இளையராஜா இசையமைத்த 1000வது படமான தாரை தப்பட்டை படப் பாடல்கள் நேற்று அதிகாலை இணையத்தில் வெளியானது. பாலா இயக்கத்தில் சசிகுமார் - வரலட்சுமி - சுரேஷ் களஞ்சியம் நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம்...
Loading posts...
All posts loaded
No more posts
