. சுன்னாகம் நீர் மாசடைதல் – Jaffna Journal

சுன்னாகம் விவகாரம்: மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள்,... Read more »

சுன்னாம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றசாட்டு

வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார்.... Read more »

கழிவு ஒயில் வழக்கு;ஆட்சேபனை சமர்பிக்க வடமாகாண சபைக்கு ஒருமாத அவகாசம்

யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது... Read more »

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை முறையான அறிக்கையின்றி ஒத்திவைப்பு!

சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »

கழிவு எண்ணெய் விவகாரம்;நோர்தன் பவர் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பு

சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமாக நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல்... Read more »

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: மத்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியாணை!

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் மாசாகக் கலந்தமை தொடர்பாக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியானையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்டப் பொலிஸ் அத்தியட்சகரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளையும்... Read more »

வலி. வடக்கு கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா? அறிக்கை சம்ப்பிக்குமாறு உத்தரவு

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து... Read more »

சுன்னாகம் மக்களுக்கு விரைவில் சுத்தமான குடிநீர் ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். காக்கை தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்ரிக்பொலித்தீன் கழிவு மீள்சுழற்சி நிலையத்தை இன்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வட பகுதியிலேயே... Read more »

சுன்னாகம் நிலத்தடி நீர் வழக்கு விசாரணை அறிக்கையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய... Read more »

“சுண்ணாகம் நிலத்தடி நீரில்எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது” அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்... Read more »

சுன்னாகம் நீர் பிரச்சினை : அனைத்து கட்சிகளிடம் ஹக்கீம் கோரிக்கை

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு... Read more »

கழிவு எண்ணெய் கலந்த நீரை குடிக்கலாமா கூடாதா? மக்கள் கேள்வி

நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால்,... Read more »

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை... Read more »

சுன்னாகத்தில் நிலக்கீழ் நீரில் கழிவு ஒயில்: ஆராயப்படும் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த!

“யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் நிலக்கீழ் நீரில் கலந்துள்ள விடயம் தொடர்பில் கனிய எண்ணெய் அமைச்சினூடாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற... Read more »

எண்ணெய் மாசைக் கண்டறிய ரூ.20 இலட்சம் மதிப்பில் நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்தது

நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று புதன்கிழமை (11.03.2015) கையளித்துள்ளார்.... Read more »

நீரில் உடனடி எண்ணைப்பரிசோதனைக்கு 1.3 மில்லியன் செலவில் கருவி புலம்பெயர் தமிழர் அனுப்புகின்றனர் – அமைச்சர் ஐங்கரநேரன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில்... Read more »

வடக்கு மாகாண சபையின் நிபுணர்குழுவால் கழிவு எண்ணெய் விவகாரம் தொடர்பில் விரிவான விஞ்ஞான ஆய்வு முன்னெடுப்பு

சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்குமாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.... Read more »