Ad Widget

சுன்னாகம் மக்களுக்கு விரைவில் சுத்தமான குடிநீர் ; விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

காக்கை தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்ரிக்பொலித்தீன் கழிவு மீள்சுழற்சி நிலையத்தை இன்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட பகுதியிலேயே மிகச் சுத்தமான குடி நீர் பெறக்கூடிய இடமாக அமைந்திருந்த சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கான குடிநீர் தற்போது தாங்கிகளின் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. விரைவில் மாசற்ற குடி நீர் விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, 11 மில்லியன் ரூபா செலவில் காக்கை தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்ரிக்பொலித்தீன் கழிவு மீள்சுழற்சி நிலையத்திற்கான அடிக்கல் கடந்த வருடம் விவசாய அமைச்சரால் நாட்டப்பட்டது.

ஒருவருட காலத்தினுள் மத்திய அரசினால் வழங்கப்பட்ட 6 மில்லியன் ரூபா மற்றும் யாழ் மாநகரசபையின் நிதியில் இருந்து வழங்கப்பட்ட 5 மில்லியன் ரூபா மூலம் கட்டடமும் இதற்கான இயந்திர உபகரணங்களும் அமைக்கப்பெற்று இன்று இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts