- Friday
- August 21st, 2026
இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார். கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு...
மாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் 'இனி யாரும் இல்லை' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர். அதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த...
பாரீஸ் நகரில் கடந்த 13-ந் தேதி துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க கூட்டுப்படைகளும்,...
இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம்...
சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நாடுகளுக்கு வருகிற மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை கடத்திச்சென்று, பிணைக்கைதிகளாக வைத்திருந்து, கொலை செய்வதை ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பான் ஜிங்குய், நார்வே நாட்டின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டெட் ஆகிய 2 பேரை...
நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று கேட்ட இளைஞருக்கு பாரீஸ் மக்களின் பதில் – வீடியோ
பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்....
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ...
வடக்கு பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஏப்ரல் 2007 -ல் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால், சுனாமி ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். பசிபிக் கடலிலல் உள்ள சாலமன் தீவில் அடிக்கடி நிலநடுக்கம்...
இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்ய வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறிதொருவருடன் தகாத உறவைப் பேணியதாக கூறி ஷரியா சட்டத்தின் பிரகாரம் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....
பாரிஸில் சென்ற வாரம் 129 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை இலக்குவைத்து பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்கு மாடிக் குயிருப்பு வீடொன்றில் ஆயுத பொலிசாரும் சிப்பாய்களுமாக அதிரடி வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். அதில் ஒருவர் பெண் என்றும் அவர் தன் மீது...
விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள்...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத்...
லெபனானின் , பெய்ரூட்டில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்ததுடன் , சுமார் 200 பேர் வரை காயமடைந்தனர். இக் குண்டு வெடிப்புகளின் போது நபரொருவர் தனது உயிரை பறிகொடுத்து , பல நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அடெல் டேர்மோஸ் என்ற அந்நபர் சம்பவத்தின் போது தனது மகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன்போது ஒரு...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டம் வெளியிட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும்...
ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, க்யூஷூ தீவிலுள்ள கஹோஷிமா கடற்கரை பகுதியை ஒரு மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கக் கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தீவுக்கு அருகாமையில் கடற்கரைக்கு அப்பாலலுள்ள வேறு சில தீவுகளையும்...
சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெண்டுல்கரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் சமீபத்தில் டெண்டுல்கர் பயணித்திருக்கிறார். அப்போது அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட சேவை குறித்து அதிருப்தி அடைந்த அவர், அந்த நிறுவனத்தின் விமானப் பணியாளர்களின் "ஏனோ,தானோ" அணுகுமுறை பற்றி தனது ட்விட்டர் கணக்கில் புகார் ஒன்றைத்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்....
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வதற்கு பெயர் போனவர்கள். இந்நிலையில் அந்த அமைப்புக்கு எதிரான ஏமனைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்றை...
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு கீழே 35 முதல் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 முதல் 6 புள்ளிகளாக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அந்தமான், நிகோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.12 மணி...
Loading posts...
All posts loaded
No more posts
