- Thursday
- August 20th, 2026
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது...
தெற்கு அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்,...
சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாதிரம் 110 பேர் மரணமாகியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது. ஆனால், நாட்டின்...
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி ஈழ தமிழர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தினை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை வேறு...
பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில்...
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில்...
உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உடல் பருமனாக இருப்பதால் வயிறு, குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் கர்பப்பை உள்பட பல உறுப்புகளில் பதினோரு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆரோக்கியமான எடையை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் புற்றுநோய்...
வத்திகானில் குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினரும், முன்பு, மதகுரு ஒருவரின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருமான மேரி காலின்ஸ் என்பவர், வத்திகானின் அதிகாரத்துவம் ஆணையத்தின் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று அவர் வர்ணித்துள்ளார். வன்கொடுமைகளை சமாளிக்க கத்தோலிக்க...
பொறுப்புக்கூறல், மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ்...
நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத...
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வியட்நாம் நாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு...
மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார். மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்...
பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. காதலர் தினம் முஸ்லிம் கலாசாரத்தில் இல்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் ஊடகங்கள் காதலர் தின நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவோ,...
ஈராக் நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினர் குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேரை பிடித்து உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இன்னும்...
அமெரிக்காவுக்குள் படகு ஒன்றின்மூலம் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 இலங்கையர்கள் உட்பட 15பேரை அமெரிக்க கண்காணிப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர். கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவரே, இந்த சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 15 பேரில் அவரும் அடங்கியுள்ளார். அமெரிக்க சுங்க...
அமெரிக்க வணிகத்தில் அதிபர் டிரம்பின் பயணத்தடை உத்தரவானது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குறைந்தது நூறு தொழில் நிறுவனங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் சில...
ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும்...
ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய விசாரணையில் அங்கு பல தசாப்தங்களாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தெரியவந்துள்ளது. பொது விசாரணையின் தொடக்கத்தில், சுமார் 2000 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மேலும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4.500 பேர் என்றும் ராயல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில கத்தோலிக்க மத குழுக்களைச் சேர்ந்த...
வகுப்பறையில் சப்பாத்துக்குப் பதிலாக செருப்பு அணியும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்பவர்களாக காணப்படுகின்றார்கள் என பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் டர்பிஷயர் பிராந்தியத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு செருப்பு அணிய வாய்ப்பளித்து பின்னர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஸ்டீவன் ஹெரல் என்பவர் இது தொடர்பில் கூறும் போது, சப்பாத்து...
அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவால் இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 71 பேரையும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைத்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த...
Loading posts...
All posts loaded
No more posts
