Ad Widget

கொலம்பிய விமான விபத்து: 75 பேர் பலி, 6 பேர் உயிர் தப்பினர்

சப்பகோயென்ஸ் கால்பந்து குழுவினரை ஏற்றி சென்ற ஒரு விமானம், கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்து 75 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 6 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

foot-ball-team

கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் மலைப்பாங்கான பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது.

கால்பந்து விளையாட்டு வீரர்களையும், அதிகாரிகளையும், மெடலின் அணிக்கு எதிராக மோதவிருந்த சப்பகோயென்ஸ் அணியின் விளையாட்டை பற்றிய செய்தியை அறிவிக்க செல்லும் செய்தியாளர்களையும் இந்த விமானம் சுமந்து சென்றிருந்தது.

இந்த விமானம் கீழே விழுவதற்கு முன்னர் கோளாறு ஏற்பட்டிருப்பது பற்றி விமானி தகவல் அளித்தாகவும், விமானம் தீப் பிடிக்கவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, விமானி எரிபொருளைக் கொட்டியிருக்கலாம் என்றும் என்றும் தரைக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதனை “மாபெரும் சோகம்” என்று மெடலின் நகர மேயர் ஃபெட்ரிக்கோ குற்றேரஸ் தெரிவித்திருக்கிறார்.
தென் அமெரிக்கக் கால்பந்து கிளப் கோப்பையின் இறுதிப் போட்டியில் அந்த சப்பகோயென்ஸ் அணியினர் மோதவிருந்தனர்.

ஏறக்குறைய சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் அனைவரையும் பலிவாங்கியிருக்கும் விமான விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்த 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரசிலிய அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்திருக்கிறார்.

Related Posts