Ad Widget

ரஷ்ய போர்க்கப்பலை தகர்த்த உக்ரைன் விமானப்படை

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய தாக்குதல் இன்றுவரை தொடரும் நிலையில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனிய விமானப்படை அழித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவிகளை செய்து வருகின்றன. மேலும் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன்...

காஸாவில் 8000 குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேல் இராணுவம் காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை உயிர் இழந்தவர்களின்...
Ad Widget

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 100 க்கும் மேற்பட்டோர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல் வௌியாகியுள்ளது....

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை ஒரே வாரத்தில் இழந்த ரஷ்யா!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் 6,700 இராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப்படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 இராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 930 இராணுவ வீரர்களை இழந்து...

பிரித்தானியாவை அச்சுறுத்தும் 100 நாள் இருமல்!

‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பக்றீரியாவால் காற்றுவழியாக பரவுவதாகவும், இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகளாக சளி, காய்ச்சல் மற்றும் லேசான இருமல் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுக்...

உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி!!

உக்ரேன் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உக்ரேன் ஆயுதப் படைகளின் முதலாவது சிறப்பு படைகளின் தளபதி விசேட அதிரடிப்படையின் தளபதியாக கடமையாற்றிய இலங்கையரான ரனிஷ் ஹேவகே உட்பட இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது. ரஷ்ய இராணுவத்தின் கறுப்பு என்று...

மீண்டும் சூடு பிடிக்கும் போர்க்களம்! உக்ரைனை சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள்!!

கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது. 75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் இதில் 40 ட்ரோன்கள் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷ்யா நடத்திய இந்த திடீர் பயங்கர ட்ரோன் தாக்குதலில், தலைநகர் கீவ் பகுதியில் உள்ள...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: அந்த நாட்டின் மலுக்கு மாகாணத்திலுள்ள டொபேலோ நகருக்கு 94 கி.மீ. வடக்கே 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் அதிா்வுகள் அருகிலுள்ள தீவுகளில் நன்கு...

போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 50 - 100 பணயக் கைதிகள் விடுதலை...

உக்ரைனின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்!!

உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. எனினும் இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் பிராந்தியத்திற்குள் ஏவுகணை ஏவி திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உக்ரைனின் கெர்சன்...

ஐரோப்பிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தம்: ரஷ்யா வெளியேற்றம்!!

ஐரோப்பிய பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா முறைப்படி வெளியேறியுள்ளது. பெர்லின் சுவர் இடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு சிஎப்இ எனும் மரபுசார் ஆயுதப் படைகளுக்கான ஒப்பந்தம்கொண்டுவரப்பட்டது. அதன்படி வழக்கமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம், பனிப்போர் போட்டியாளர்களை ஒரு விரைவான தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய படைகளை கட்டியெழுப்புவதை நிறுத்துவதாகும்....

காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சியளிக்கும் கொடூரம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன்(07) ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், யுத்தத்தினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்களினால் காசா பகுதியில்...

தீவிரமடையும் போர்க்களம்! 9000 உயிர்களை பறிகொடுத்த மக்கள்!!

ஹமாஸ்-இஸ்ரேளுக்கு இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய பாலஸ்தீனத்தின்-காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 7, 703 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் மேலும் 109 பேர்...

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் திடீர் திருப்பம் : நேரடியாக களத்தில் இறங்கும் ரஷ்யா!!

காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழு தற்போது மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. மொஸ்கோவிற்கு வருகை தந்தவர்களில் மூத்த ஹமாஸ் உறுப்பினர் அபு மர்சூக் அடங்குவதாக பாலஸ்தீனிய தூதுக்குழுவின் ஆதாரத்தை மேற்கோள்...

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு – 16 பேர் பலி

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை...

மாவீரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி உட்பட பலர்!!

இறுதி கட்ட போரின் போது களமாடி வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களில், யுத்த நெருக்கடி காரணமாக அடையாளப்படுத்தப்படாமல் விடுபட்ட மாவீரர்களில், உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களின் வீர வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (22.10.2023) பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு தமிழீழ மாவீரர் பணிமனையால்...

மருத்துவமனையின் மீது தாக்குதல் – 500 பேர் பலி!

காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை...

ரஷ்யா – வட கொரியா ஆயுத ஒப்பந்தம்: ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா - வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட இராணுவ தளபாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல்...

பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை: இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு!!

பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்....

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் :மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் நடந்து வரும் போர் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா மீதான தமது வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் அதிகமான இராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக இராணுவத் தளவாடங்களுடன்...
Loading posts...

All posts loaded

No more posts