உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். அதேநேரம்,...

ஜேர்மனியில் 5,000 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், வாராந்த சராசரி வெப்பநிலை வழமைக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸைக் (20°C) கடந்த...
Ad Widget

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!!

தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளின்படி, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து அடர்த்தியான கருப்புப் புகை வானத்தை நோக்கி எழுந்தது. நூற்றுக்கணக்கான மீட்புப்...

ChatGPT மூலம் கார்ட்டூன் தளத்தின் 46,000 கணக்குகளை முடக்கிய 15 வயது மாணவன் ஜப்பானில் கைது!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட ChatGPT மென்பொருளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட கணினி நிரல் மூலம், பிரபல ஜப்பானிய கார்ட்டூன் இணையதளத்தின் 46,000 இற்கும் அதிகமான பயனர் கணக்குகளை இரத்து செய்த 15 வயது பாடசாலை மாணவனை ஜப்பானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மாணவன் 'Bandai Namco Filmworks' நிறுவனத்திற்குச் சொந்தமான 'Bandai Channel' என்ற...

அமெரிக்க தாக்குதலில் ஈரான் இராணுவத்தினர் 8 பேர் பலி!!

அமெரிக்க நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்த நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது. இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், பிரெண்ட் ரக...

முடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்!! டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என...

கடல் கடந்த தமிழ் நாகரிகம் : தாய்லாந்தில் அரிய வகை தங்க மோதிரம் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச்...

அமெரிக்கத் தாக்குதலால் உலகச் சந்தையில் மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும். பிரெண்ட் (Brent) ரக...

பாகிஸ்தான் விமானம் மாயம்!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) ஏற்பட்ட கோளாறு குறித்து அறிவித்த பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக...

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: உக்ரைனில் ஏவுகணைத் தட்டுப்பாடு!

ரஷ்யாவினால் ஏவப்படும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும், அவற்றை வான்பரப்பில் வைத்து அழிப்பதற்கும் தேவையான ஏவுகணைகளுக்கு உக்ரைனில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைத் தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவினால் உக்ரைன் மீது ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்தால் அழிக்க முடியாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

பிரான்ஸில் காட்டுத்தீயால் 10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!!

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவி வரும் கடும் கோடை கால வெப்ப அலையின் தாக்கத்தினால் பிரான்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பிரெஞ்சு பைரினீஸ் மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட...

ஜூலை மாதம் முதல் எல் நினோ நிலைமை மேலும் தீவிரமடையும் என கணிப்பு

உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை...

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்: உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. [caption id="attachment_127561" align="aligncenter" width="760"] What is Brent Crude[/caption] மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சீரடைந்து வருவதும் உலகளாவிய விநியோகம் அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகக்...

ஒரே நேரத்தில் 14 தாதியர்கள் கர்ப்பம்!

அமெரிக்காவின் Ohio பகுதியில் உள்ள Miami Valley வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 17 தாதியர்களும் கர்ப்பம் கர்ப்பமடைந்துள்ளமை பேச்சு பொருளாக மாறியுள்ளது. 17 தாதியர்களும் வரிசையாக Baby Bumps உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளதாகவும், இது தங்கள் அனைவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக...

11 வயது சிறுவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் 8 தேரர்கள் பலி

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na...

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதியில்லை!!

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்....

நியூயோர்க்கின் உயரமான கட்டிடத்தில் காதல் ஜோடி செய்த காரியம்!!

நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச...

ஒரே நாளில் 3,00,000 மின்னல்கள்!

நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது....

மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கூரை...
Loading posts...

All posts loaded

No more posts