- Monday
- September 14th, 2026
கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார். 20011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது...
உலக கோப்பை தொடக்க விழா நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. ஒவ்வொரு நாட்டுகுழுவும் தங்களது கலைநிகழ்ச்சிகளை திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பு நிகழ்த்தி காண்பித்தனர். இலங்கை சார்பில், எமது நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலையில் கிரீடம் வைத்துக் கொண்ட பெண்கள் இரு குழுவாக...
11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. போட்டி ஆரம்பமாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆரம்ப விழா இன்று (12) இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலும் உள்ளூர் நேரப்படி இரவில் ஆரம்ப விழா...
கிரிக்கெட் ரசிகர்களின் பிரியத்துக்குரிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதியை ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 8ம் தேதி 8வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மே 24ம் தேதியுடன் இந்தப் போட்டிகள் முடிவடையும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8வது ஐபிஎல் தொடர் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம்...
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அணிவீரர்களை உற்சாகமூட்டும் வகையில் 130 மில்லியன் ரூபாய்களை வழங்க உள்ளதாகவும், குறித்த பணத்தை திறைசேரியில் இருந்து பெறாமல் தனியார் துறைகளின் ஊடாக பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியினர் தனதாக்கி கொண்டனர். நேற்று முன்தினம் (31) சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளின் இறுதி போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றோருக்கான...
சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கையர் என்ற பெருமையை குமார் சங்கக்காரா தனதாக்கிக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முந்தினம் (29) வெலிங்டனில் இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை வீரர்களின் பொறுமையான ஆட்டத்தின்...
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, முன்னதாக இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது. இதில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து, இந்த...
கிரிக்கெட்டையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சச்சின் அடித்து ஆடும்போது இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலபேர் வகுத்துக் கொண்ட எழுதப்பட்டாத நம்பிக்கை. எழுந்தால் எங்கே விக்கெட் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம். கும்ப்ளே-சச்சின் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளே...
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் ராவிட் விமர்சித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் ராவிட் கூறியதாவது: "எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே...
6 பந்துகளில் அரைச்சதம், 31 பந்துகளில் சதம் என, ஒரே நாளில் அனைத்து சாதனைகளையும் தென்னாபிரிக்கா அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜொகேனர்ஸ் பேர்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே டி வில்லியர்ஸ் இந்த சாதனைகளைப் படைத்தார். இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு இலங்கையின்...
உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா- நியூஸிலாந்தில் வரும் பெப்ரவரி மாதம் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது. இதற்கான இலங்கை அணியே நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சத்திர சிகிச்சை செய்திருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவும் இடம்பெற்றுள்ளார். அணிவிவரம்:- ஏஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், குமார்...
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளான இன்று, நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றிகொண்டு தொடரை வெள்ளையடிப்பு செய்துள்ளது. இந்தப் போட்டியில், தனது முதலாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 221 ஓட்டங்களையும் இலங்கை 356 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. அதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆட்டமிழக்காது...
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள 4 ஆவது டெஸ்ட் போட்டியில் அரங்கத்தை நெகிழவைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகின்றது. அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பெடுத்தாடிவரும் டேவிட் வோர்னர் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் கடந்த சில...
இலங்கை, பங்களாதேஷ் நாடு களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடை பெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள்...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணித்தலைவர் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் இந்திய அணித்தலைவர் டோனி. ஒருநாள், ருவென்ரி-20 போட்டிகளில் கவனம் செலுத்தவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். சிறந்த...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை பெற்றது. பதில் அளித்த இலங்கை 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பின்னர் பொலோன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களைப்...
யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை...
வலைப்பயிற்சியின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பவுன்சர் ஒன்று ஷேன் வோட்சனின் ஹெல் மெட்டைத் தாக்கியதில் அவர் அதிர்ந்து போனார். இதனையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனும் பயிற்சியைத் தொடராமல் வருத்தத்துடன் வெளியேறினார். பந்து வோட்சனை தாக்கியதும் பேட்டின்சன் உட்பட அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவ ரும் வோட்சனை...
இந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கான புதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில் புவனேஸ்வர் குமார் 'ஏ' தரத்துக்கு முன்னேறினார். அத்துடன் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கிண்ண அணிக்குத் தேர்வானோரே இந்தப் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒப்பந்த விவரம் வருமாறு: தரம் 'ஏ' - (வருட சம்பளம்: ஒரு கோடி...
Loading posts...
All posts loaded
No more posts
