Ad Widget

வடக்கின் முதலாவது விக்கெட் தரை இன்று திறந்து வைப்பு!

வடமாகாண வீரர்களுக்காக யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது விக்கெட் தரை இன்று (29) காலை 09.30 மணியளவில் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பெருமையுடன் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள விளையாட்டு வீரர்களின் நன்மை கருதி முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியா மற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இலங்கை இராணுவ அணியின் பிரிகேடியர் திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இவ்வாறான செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மைதான புனரமைப்புக்காக சுமார் 5 மில்லியன் ரூபாவும் விக்கெட் தரை அமைப்புக்காக சுமார் 3 மில்லியன் ரூபாவும் ஒதுக்கபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

திறந்து வைக்கப்பட்ட தரை மைதானத்தினை மேலும் சிறப்பிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜெயசூரிய, பிரமோதய விக்கிரமசிங்க, உப்புல் சந்தன, ரவீந்திர புஷ்பகுமார, நிரோஷன் பண்டாரதிலக, ஆகியோர் ஒன்றிணைந்து T20 சுற்றுப் போட்டியினை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts