Ad Widget

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்??

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

sri-lanka-cricket-logo

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அதுதொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடு இதுவரை பதிவாகவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்தி தகவல்களை சேகரித்து அது தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஏஸ்லி டி சில்வா குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, உதவி செயலாளர் ஹிரந்த பெரேரா, தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய ஆகியோர் விசாரணைக் குழுவில் உள்ளதாக அவர் கூறினார்.

Related Posts