Ad Widget

அடுத்த உலக கிண்ணத்தில் பல மாற்றங்கள் – முழு விபரம்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந் திகதி முதல் மார்ச் 29–ந் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.

ICC-Cricket_world_cup

இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கிண்ணத்தில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கால்இறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட மாட்டாது. குழு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

இதேபோல இறுதி ஆட்டம் ‘டை’யில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கிண்ணம் அளிக்கப்படும்.

உலக கிண்ணத்தில் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.60 கோடியாகும்.

2011–ம் ஆண்டு உலக கிண்ணத்தை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 2011–ம் ஆண்டு உலக கிண்ணத்தில் மொத்தம் ரூ.48 கோடி பரிசு தொகை தான் வழங்கப்பட்டது.

2015–ம் ஆண்டு உலக கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும்.

அதே நேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கிண்ணத்தை வென்றால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், கால் இறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்.

Related Posts