- Monday
- September 14th, 2026
விராட் கோஹ்லிக்கு பந்து வீசுவது கண்டிப்பாக எனக்கு கவலையளிக்கும் விடயம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவரான விராட் கோஹ்லி தற்போது ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வருகிறார். இந்த தொடரில் 919 ஓட்டங்களை குவித்துள்ள கோஹ்லி, 4 சதங்களும் விளாசி சாதனை படைத்துள்ளார். தனது...
இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் குவித்துள்ளது. அதிகபட்மாக அலெக்ஸ் ஹாலஸ் 83 ஓட்டங்களும், ஜோ ரூட் 80 ஓட்டங்களும்,...
இங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரான...
யாழ் மாவட்டத்தில், முதன் முதலாக யாழ் மாவட்டத்திற்குள் இயங்க கூடிய முன்னணி துடுப்பாட்ட கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 42 வீரர்களை கொண்ட GPL(Grasshoppers Premier League) என்ற துடுப்பாட்ட சுற்றுப்போட்டியை கிராஸ் கொப்பெர்ஸ் (Grass Coppers) விளையாட்டு கழகம் நடாத்த உள்ளது. இந்த GPL சுற்று போட்டி மறைந்த விளையாட்டு வீரர்களான ரொஹான் மற்றும் சங்கர் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகிறது...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும் சிகிச்சைகளைப் பெற சமீர இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரியவந்துள்ளது. இவருக்கு பதிலாக யாரை இங்கிலாந்து தொடருக்கு அனுப்புவது என்பதை இலங்கை கிரிக்கெட்...
கிரிக்கெட் வீரர், (விக்கெட் காப்பாளர்) சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைந்து கொண்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகல துறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸுக்கு, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை விளையாடும் போது அந்த அணியின் முன்னணி வீரர் ஸ்டோக்ஸ் 12 ஓட்டங்களை எடுத்தார். 7...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு...
27 வயதான விராட் கோலி ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் விவரம் வருமாறு:- *ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 9-வது ஐ.பி.எல். தொடர்...
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி Headingley, Leeds இல் நேற்று ஆரம்பமானது. நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும்...
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்காக உதவிப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று முதல் கொழும்பு 07ல் உள்ள கிரிக்கட் நிறுவன காரியாலயத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 011 2 68 16 01 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியை புனே பவுலர்கள் 121 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். அசோக் திண்டா, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய புனே அணி ஒரு விக்கெட்டுக்கு...
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள முதலாவது கூட்டத்தில் மஹேல ஜயவர்தன கலந்து கொள்ளவுள்ளார். மஹேல ஜயவர்தன 1996ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1161 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன்...
இங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் இலங்கை விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இவ்வருட பருவகாலத்தின் ஆரம்பத்தில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் ஜேக் போல் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பிடித்ததோடு, இதுவரையில் இங்கிலாந்து சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய...
வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட்கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது...
பந்து தாக்கி மரணம் அடைந்த பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த விசாரணை அறிக்கை எதிரொலியாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ‘ஹெல்மெட்’ அணியாமல் விளையாடக்கூடாது என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தலையின் பின்பகுதியில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஆஸ்திரேலிய...
இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த ஆண்டு அக்டோபரில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூடி, சஷாங்க் மனோகரை தலைவராக நியமித்தது. இந்நிலையில், சஷாங்க் மனோகர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான...
இலங்கை அணியின் பந்துவீச்சு, உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளுள் ஒன்று எனத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தையே, பிரச்சினைக்குரிய பகுதியாக இனங்கண்டுள்ளார். மே முதலாம் திகதி முதல் தனது பதவியை ஏற்றுள்ள சனத் ஜெயசூரிய, ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts
