Ad Widget

வாசிம் அக்ரமையே மிரள வைத்த கோஹ்லி

விராட் கோஹ்லிக்கு பந்து வீசுவது கண்டிப்பாக எனக்கு கவலையளிக்கும் விடயம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவரான விராட் கோஹ்லி தற்போது ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வருகிறார்.

இந்த தொடரில் 919 ஓட்டங்களை குவித்துள்ள கோஹ்லி, 4 சதங்களும் விளாசி சாதனை படைத்துள்ளார். தனது துடிப்பான ஆட்டத்தால் பெங்களூர் அணியை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் விராட் கோஹ்லி பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் கூறுகையில், கோஹ்லியின் நம்பிக்கை, திறமை, உத்தி ஆகியவற்றால் அவர் உச்சத்தில் உள்ளார்.

அவர் ரிவர்ஸ் ஷாட் அல்லது லாப் ஷாட் எல்லாம் ஆடுவதை பார்க்க முடியாது. அவர் எப்போதும் நேர்த்தியான ஷாட்டுகளையே ஆடுவார். அதனாலே அவரால் சீராக செயல்பட முடிகிறது.

ஒரு பந்துவீச்சாளராக அவருக்கு நான் பந்துவீச செல்லும் போது வருத்தப்படவே செய்வேன். சச்சின் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் போது அவருக்கு பந்துவீசுவது கடினமானது. சச்சின், கோஹ்லி இருவருமே ஆட்டமிழக்க வாய்ப்பு கொடுப்பதே கடினம் என்று கூறியுள்ளார்.

Related Posts