தெ. ஆபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க்...

ICC கிரிக்கட் விருது விபரம்: வருடத்தின் சிறந்த வீரர் ரவிசந்த்ரன் அஷ்வின்

இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்த்ரன் அஷ்வின் 2015 -16 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்டின் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் Sir Garfield Sobers விருதை பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஷ்வினாகும். இதற்கு முன்னர் சசின் டென்டுல்கார் மற்றும்...
Ad Widget

கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ் இளைஞர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 34 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. இதற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்து டிக்ளேர் செய்தது....

முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய கருண் நாயர் : இந்திய அணி புதிய சாதனை

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளதோடு டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றியுள்ளார் கருண் நாயர். கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்சர், 32 பவுண்டரிகளுடன் 300...

3வது டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்து அசத்திய கருண் நாயர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 199 ரன்கள் குவிக்க 3-வது நாள்...

சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின், தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் தீவிர ரசிகர்களான சுதீர், ராம் பாபு ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் தீவிர...

கிரிக்கெட் வரலாற்றில் அதிசயமான முறையில் ஓட்டங்களை குவித்த மகளிர் அணி

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் வரலாறு காணாத சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. டி20 போட்டியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்ளூர் கிரிக்கெட் அணியான புமலங்கா அணியைச் சேர்ந்த சானியா லீ சுவார்ட் என்ற பெண் வீராங்கனை தனியொரு ஆளாக நின்று 84 பந்துகளில் 160 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம்...

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவிப்பு

தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரபல துடுப்பாட்ட வீரர் ஏ பீ டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்தும் காயத்தினால் அவதிப்பட்டுவரும் டிவில்லியர்ஸ் நடைபெறவுள்ள இலங்கைக்கான தொடரில் விளையாடுவதாக இருந்த நிலையில், காயத்திலிருந்து பூரணமாக குணமடைய இன்னும் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவ அறிவுறுத்தலை அடுத்தே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்....

400 ரன்களில் இங்கிலாந்து ஆல்-அவுட்!

மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள்...

லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி

வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் அசௌகரிய நிலைமை ஏற்பட்டமை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். லசித் மாலிங்காவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்ற அதேவேளை, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 தொடரில் இவர்...

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார்....

ஜென்னிங்ஸ், குக், அஸ்வின் சாதனை

மும்பையில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் போட்டியில் ஜென்னிங்ஸ், குக், அஸ்வின் சாதனை படைத்துள்ளனர். * இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் இந்தியாவுக்கு எதிராக நேற்று 2 ஆயிரம் ரன்களை (24 டெஸ்டில் 2,027 ரன்) தாண்டினார். இந்தியாவுக்கு எதிராக இந்த இலக்கை கடந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2,555 ரன்), வெஸ்ட் இண்டீசின்...

இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்க்கும்போது அணியின் எதிர்காலம் சிறப்பாகவுள்ளது

இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்க்கும்போது இலங்கை அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர் ஒருவரை பொறுத்தவரையில் முதலில் கவனிப்பது அவரின் வேகம் மற்றும் ஸ்விங் செய்யும் திறமை என்பவை ஆகும். இதனை இலங்கையின் இளம் வீரர்கள் சிறப்பாக செய்துவருவதுடன், அதனை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கை...

ஆண்டின் சிறந்த வீரர் அன்ஜலோ மெத்தியுஸ்: மக்கள் தெரிவு திலகரத்ன டில்ஸான்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ்இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம் கலந்து கொண்டார். இவ்விழாவில் வருடத்தின் சிறந்த வீரராக இம்முறையும் அன்ஜலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை இவர் டெஸ்ட் மற்றும் ஓருநாள் போட்டிகளுக்கான...

டோனி சாதனையை சமன் செய்த விராட்கோலி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 417...

இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தியது இந்தியா!

மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்திய அணி. ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது. விசாகபட்டினம் டெஸ்டில் இந்தியா வென்றது. மொகாலியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 283...

இலங்கை அணி வீரர்களுக்கு வசீம் அக்ரம் பயிற்சி!

இலங்கை அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் விஷேட ஒருநாள் பயிற்சி ஒன்றை வழங்க உள்ளார். குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது....

பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலடி கொடுத்த விராட் கோலி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அப்போது இந்திய வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளால் திட்டிக்...

இலங்கை அபார வெற்றி

சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர். இதன்படி 36.3 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சிம்பாபே, 160...
Loading posts...

All posts loaded

No more posts