Ad Widget

விராட் கோலியை இனி விட மாட்டேன்: ஜேக் பால் சவால்!

இந்திய கேப்டன் விராட் கோலியை இரண்டாவது ஒருநாள் போட்டியில் செட்டிலாக விட மாட்டேன் என இங்கிலாந்து வீரர் ஜேக் பால் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது.

முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த போதும் கோலியுடன், கேதர் ஜாதவ் கைகோர்த்து இங்கிலாந்து பவுலர்களை சுளுக்கெடுக்க, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை கட்டாக்கில் நடக்கவுள்ளது. இம்மைதானத்துக்கு ஒரு தனி வரலாறே உள்ளது. குறிப்பாக கடந்த 2015ல் இந்தியா வந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் கடுப்பான ரசிகர்கள் மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டிலை வீசினர். இதனால் போட்டி தாமதமானது.

இதுபோல இம்முறை நடக்ககூடாது என மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து பால் கூறியது:

இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் இம்முறை அவருக்கு சரியான திட்டம் தீட்டியுள்ளோம். அதிலிருந்து அவர் தப்புவது கடினம் தான். தவிர, போட்டி பகலிரவாக நடப்பதால், அதுவும் ஒரு சாதகம் தான். இவ்வாறு பால் கூறினார்.

Related Posts