ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவு குழு யாழ் விஜயம்

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர்கள் யாழ் மாவட்டத்திற்கு தீடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் நேற்று காலை யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டதை தொடர்ந்து அதற்கு முன்பாக உள்ள நவீன மயமாக்கப்பட்டுள்ள யாழ் தலைமை பொஸிஸ் நிலைய கட்டிடத் தொகுதியினையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பொஸிஸ், இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலனிக் குழுவினர்...

40 இலங்கையர்கள் நிர்க்கதி

தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 40 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக, இந்தோனேஷியப் பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
Ad Widget

கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை மீட்ட தமிழக மீனவர்கள்

தமிழகத்தின் நாகை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையை சேர்ந்தவர்கள் வந்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது. இதனையடுத்து, அப் படகில் இருந்தவர்கள் அக்கரைபேட்டையே சேர்ந்த குமார் என்பவரது விசைபடகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கைச் சிறுமி (காணெளி)

காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும் காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் தனது கைகளால் கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. அதாவது சிறுமி கையை காட்டி முன்னோக்கி...

யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில், யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது கடமைப் பொறுப்பேற்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் இஸ்லாம் மத குருமார்களின் ஆசியின் பின்னர்,...

டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில்...

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித திலகரட்ன கூறினார். சீமேந்து தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றின்...

இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்

இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.   இதன் காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும்...

சலாவ வெடிவிபத்துடன் புலிகளுக்குத் தொடர்பா?

சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்று, விசாரணைகள் முடியும் வரை – எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த அதிகாரி...

ஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை: முதலமைச்சர்

வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல...

‘முதலமைச்சரின் கையை உடைக்கவேண்டும்’ வடமாகாண சபை உறுப்பினர்

தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத்...

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கூடாது! 10 காரணங்களை கூறுகிறார் கம்மன்பில!!

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது என நேற்று சபையில் திட்டவட்டமாகக் கூறி, அதற்காக தான் கண்டுபிடித்த 10 காரணங்களையும் முன்வைத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்...

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக வடமராட்சியில் குற்றங்கள் குறைந்தன

வடமராட்சிப் பிரதேசத்தில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. சிவில் பாதுகாப்புக் குழுக்களும் ஊடகங்களும் பொலிஸாருக்கு வழங்கிய ஒத்துழைப்பே குற்றங்கள் குறைவடையக் காரணமாகும். இவ்வாறு காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவிருத்திருக்கிறார். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களுடனான சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச்...

மயிலிட்டியிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடித்தால் நிலைமை என்னாகும்? முதல்வர் விக்கி

கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய்போய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ...

புனர்வாழ்வளிக்கப்பட்ட பெண் போராளிகள் இராணுவ பெண் படையினருடன்!

யாழ் பகுதியில் வசித்து வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றும் வகையில் 7 ஆவது இலங்கை இராணுவ பெண்கள் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது கட்ட சமூக பொருளாதார நலன் ஒருங்கிணைப்பு செயலமர்வு அண்மையில் (4) கோப்பாய் கிருஸ்த்துவ கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வானது இராணுவ பெண்கள் படையினர் மற்றும்...

உலக சமாதான சுட்டியில் இலங்கை 18 இடங்களால் முன்னேற்றம்!

2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை இருந்த இடத்தினை விட 18 இடங்களால் முன்னேறி 97 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இலங்கை உள்ளக மற்றும் வெளியக சமாதானத்தினை பேணுவதில் ஒரு நாடு என்ற வகையில் தனது பலத்தினை நிரூபித்துள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும்...

யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரித்தானிய உயர் ஸ்தானகர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிகர் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் (James Duaris) உள்ளிட்ட இருவர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர். இதன்போது இவர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்...

யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தரமான வீடுகள்

யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65,000 விடூகளை பெற்றுக் கொள்வதற்கு 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் சிறைச் சாலைகள் தொடர்ப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போது...

லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை...

பாராளுமன்றில் (ஒத்திவைப்பு) பிரேரணை- இரா சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் பாரளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணை முழுமையாக 2016 ஜூன் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையில் பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்று தொடர்பான முன்னகர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அறிவித்தலொன்றை இத்தால் தருகின்றேன். இந்த நாட்டில் ஆயுதக் கலவரம் ஒன்று முடிவடைந்து ஏழு வருடங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts