சிறுதொழில் முதலீட்டாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு

வேலை வாய்ப்பு மற்றும் சிறுதொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த மதிப்பீடுகளை அமெரிக்காவின் மிலேனியம் சவால்களிற்கான தொழில்நுட்ப ஆய்வுகூட அதிகாரிகள் ஆராய்ந்து சென்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பொறுப்பாளர் நஸ்ரீன் மரிக்கார் (Nazreen Marikkar Political Specialist Embassy of the united...

வித்தியாவின் தாயாரை மிரட்டியவருக்கு பிணை மறுப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவுத்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி வித்தியா வண்புனர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவுத்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன நிலையில் வித்தியாவின் தாயார் சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தபட்ட வழக்கு இன்று...
Ad Widget

மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர்; பெற்றோர் போராட்டம்

யாழ்.காங்கேசன்துறை வீதியில் உள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த...

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள்...

ஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு!

நல்­லி­ணக்க அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை விரைவில் நிறை­வேற்­ற­வேண்டும். குறிப்­பாக கால­தா­ம­த­மின்றி மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலை­ வரும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இந்த வார­ம­ளவில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கும் இடையில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது...

தமிழ் அகதிகளை விமானம் மூலம் நாடு கடத்தும் முயற்சியில் இந்தோனேஷியா!

இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம்...

மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்...

வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். சண்முகம் செல்வராசா (வயது 55 ) என்ற வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், தனது வீட்டு வாசலில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.வாகனமொன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டதாக...

பஸ் கட்டண அதிகரிப்பு இப்போதைக்கு இல்லை

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தேசிய கொள்கை தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதாகவும் அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவையென்றும் போக்குவரத்து அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு முன்வைத்த கோரிக்கைக்கு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கமைய, பஸ் கட்டணத்தை 15 சதவீதத்தினால்...

தமிழ் மொழியினால் சபையில் தடுமாற்றம்

சபையின் நேற்றையதின பிரதான நடவடிக்கைகள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சபையில் பல தடுமாற்றங்கள் நிலவியதை அவதானிக்க முடிந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர் பலரும் தடுமாறிப் பேசினர். அவைக்குத் தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபாநாயர் அறிவிப்பு முதல் அக்கிராசனத்திலிருந்து தான் எழுந்து செல்லும் வரையிலான சகல நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளையும் தமிழ் மொழியிலேயே...

 ‘வெரிகுட்’ சொன்னார் சம்பந்தன்!! திகைத்தனர் எம்.பி.க்கள்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (21) 'வெரிகுட்', 'வெரிகுட்' (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர். நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபையின்...

ஜனாதிபதி தலைமையில் சிறுவர் தொழிலுக்கெதிரான தினம்!

ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 ஆம் திகதி சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இவ்வருடத்துக்கான தொனிப்பொருளாக"விநியோகச் சங்கிலியில் சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல்" பேணப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இலங்கையில் சிறுவர் தொழிலுக்கெதிரான உலக தினம் இன்று(22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில்...

மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு ராஜித்த பணிப்பு

மருந்துகளின் விலையை குறைப்பதற்கான வழிவகை ஒன்றை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் புதிய தலைவர் அசித டி சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி குறைந்த விலைக்கு அதி சிறந்த தரத்துடனான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் படி அவர் அறிவுரை வழங்கியுள்ளார். அசித டி...

முதல் தடவையாக குழந்தை பருவம் தொடர்பிலான கணக்கெடுப்பு

மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சிறுவர் செயலகம் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முதன் முறையாக குழந்தை பருவம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் 05 வயதுக்கு குறைவான குழந்தைகள் தொடர்பில்...

இராணுவ முகாம் இல்லை, இருப்பினும் பீதியில் தமிழர்கள்!!

இலங்கையில் போர் முடிவடைந்து 7 வருடங்களாகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட சில இடங்களில் இன்னமும் வெடிப் பொருட்கள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது. அந்த இடங்களில் மிதிவெடி அபாய எச்சரிக்கை அறிவிப்புகள் காணப்படுவதால் இராணுவம் விலக்கிக் கொண்ட தங்கள் காணிக்குள் செல்ல முடியாதிருப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கள் காணிகளில்...

கொத்து குண்டு விவகாரம்: உரிய பதிலளிக்காத இலங்கை அதிகாரிகள்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வௌியான செய்திகளுக்கு, அரசாங்கம் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த அறிக்கை பற்றி ஆராய்வதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்...

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி- மஹிந்த அணி சற்றுமுன் திட்டவட்டமாக அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களை இலக்குவைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் 2 தீர்மானங்கள்

வெளிநாட்டவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று நான்கு வாரங்களில் அரசாங்கம் இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் விரைவில் காணிச் சட்டத்தை திருத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் காணிகள் கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் தற்போது நாட்டில் சட்டம் காணப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில்...

யாழ் பிரபல பாடசாலையில் 05 மாணவிகள் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பிரபல பாடசாலையில் 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபரிற்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை...

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts