யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில், யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது கடமைப் பொறுப்பேற்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

police-kaniston

இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் இஸ்லாம் மத குருமார்களின் ஆசியின் பின்னர், சம்பிரதாய பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், யாழ். மாவட்டத்தில் தற்போது, நிலவும், மதுப்பாவணை, வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் விசேடமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய பின்னர் இங்கிருந்து, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்.

சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சமூக கலாசார சீர்கேடுகள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கூறினார்.

Related Posts