- Friday
- August 14th, 2026
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உணவு தவிர்ப்பில்...
மலேசியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு சட்டத்தை உயர்ந்த பட்சம் நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்கள் இலங்கையர்கள் எனின்,...
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல் பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மக்கள் பிரதிநிதிகளான தம்மையும் உதாசீனப்படுத்துவதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாணசபை அமர்விலேயே அனந்தி மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த மாவட்ட ஒருக்கிணைப்புக் குழு கூட்டங்களை வைத்து...
உயர் மட்டத்தின் உத்தரவுகளினால் இராணுவம் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் தவறில்லை எனவும் இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர...
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார். ஆனந்தாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதல் பிரதியை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல்...
விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை மூலம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கடந்த 2011ஆம் ஆண்டு...
யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு எதிரிகளையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும்இ யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும்...
கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு இடையில் நீண்டகாலமாக குடும்ப தகராறு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு குறித்த உயிரிழந்த நபரும் அவரது உறவினரும் கோணப்புலம் முகாம் பகுதியில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு கைகலப்பாக...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது விண்ணப்பங்கள் செய்யவுள்ளீர்களா...
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 'அதிபரை பாடசாலையில்...
'இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின்...
வெல்டிங் வேலை செய்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ரஜீவ் (வயது 32) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த குடும்பஸ்தர் கொக்குவில் பிடாரி கோவில் உள்ள மாடி வீட்டு பகுதியில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் நேற்று (05) மாலை மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சாரம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு இன்று (06) செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில்...
யாழ் மாவட்டத்தில் இன்று தொலைத்தொடர்பு பரிவர்த்தனை சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன. இணைய வலையமைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே குறித்த சேவை தடைப்படதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை...
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ள உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற்...
மது மற்றும் புகைத்தல் பொருட்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரியை உடனடியாக நடை முறைப்படுத்தக் கோரி நேற்று திங்கட்கிழமை சங்கானை பஸ் தரிப்பிடத்தில் கவன ஈர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வும் நடைபெற்றது. ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அங்கு வினா எழுப்பப்பட்டது. வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனம் ஏற்பாடு செய்த இப்...
கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச்...
Loading posts...
All posts loaded
No more posts
