சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி மறுப்பு

சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு...

ஜனாதிபதிக்கு விஷேட விருது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசியாவுக்கான பணிப்பாளரினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட கோரி வழக்குத் தாக்கல்

வட மாகாணத்தில் அமைந்துள்ள புத்த விகாரைகளை பாதுகாக்கும் படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தர்ஷன வேரதுவகே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக வடமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் ,சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்பட சில அதிகாரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடந்த...

விபத்தில் ஒருவர் பலி

ஆனையிறவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக சென்ற...

நல்லைக் கந்தன் ஆலயத்தில் உங்கள் பொருட்களை தவறவிட்டுள்ளீர்களா?

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம்...

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவித்தல்

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அராஜகம் : தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் தாக்குதல்!!

யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு...

விவசாயப் போதனாசிரியர்கள் பயிர் மருத்துவர்களாகத் தங்களைத் தரம் உயர்த்த வேண்டும் :பொ.ஐங்கரநேசன்

விவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன்மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு மின்- பயிர்ச்சிகிச்சைப் பயிற்சியை வழங்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை (05.09.2016) திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தில்...

வடக்கு மக்களது பாதுகாப்பிற்கு புதிய சட்டம்!

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம் சென்று அல்லது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கடன் அடிப்படையில் பல நிதி உதவிதிட்டங்களை செய்கின்றன. ஆனால் அதை வசூலிப்பதற்காக கிராமங்களிற்கு அல்லது கடனாலிகளின் வீட்டிற்கு நேரகாலமின்றி கடனை வசூலிப்பதற்காக recovery officer என்றொருவர் சென்று கடன்களை...

ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்: டக்ளஸ்

கொலைகள் மற்றும் கொள்ளைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தொடர்புகள் இருப்பதாக சுப்பையா பொன்னையா என்பவர் கடந்த 29.08.2016 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் சில பத்திரிகையாளர்களுக்கு கூறியிருப்பதை விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். இது...

மனிதத்தை இயற்கையை நேசிக்கும் நண்பர்களுக்கு மானிடம் அறக்கட்டளையின் வேண்டுகோள்!!

யாழ்.தெல்லிப்பளை மானிடம் இயற்கை வேளாண் பண்ணையில் முதலீடு செய்யுமாறு மானிடம் அறக்கட்டளை சார்பாக அன்புரிமையுடன் வேண்டுகின்றோம். பின்வரும் தெரிவுகளில் ஒன்றின் மூலம் நீங்கள் உதவலாம் . ரூ.ஒரு இலட்சத்துக்கு குறையாத முதலீடு ஒரு வருடத்தின் பின் பங்கு லாபம் ரூ.ஒரு இலட்சம் / 50,000 ஒரு / இரு வருடத்தில் மீளளிக்கும் தொகை வருடம் 25,000...

யாழில் சாராயக்கடைக்குள் புகுந்த பெண் : மகன் மீது கடும் தாக்குதல்

யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சாராயக்கடையில் 18 வயது மாணவனான தனது மகன் நண்பர்களுடன் இணைந்து பதுபானம் அருந்திக்கொண்டிருப்பதை அறிந்த அரச ஊழியரான பெண் ஒருவர் சாராயக் கடைக்குள் அதிரடியாகப் புகுந்து மகனை நையப்புடைத்துள்ளார். தந்தை இல்லாத குறையை தன் மகனிற்குக் காட்டாது அவன் கல்விக்காகப் கஸ்ரப்பட்டு உழைத்துவரும் நிலையில் கூடா நட்புக்களுடன் சேர்ந்து தனது...

இலங்கைத்தயாரிப்பு முச்சக்கரவண்டி விரைவில் சந்தைக்கு!

மிக விரைவில் இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி சந்தைக்கு வரவுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி உற்பத்தி நிறுவனமான மார்க்ரோ அறிவித்துள்ளது. இந்திய பஜாஜ் நிறுவன முச்சக்கர வண்டிக்கு ஒப்பானதாக இந்த தயாரிப்பும் அமைந்துள்ள போதும் இதன் சந்தை விலை 475000 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரவிபாஞ்சான் மக்கள் ஆறாவது நாளாகவும் போராட்டம்

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்க கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், கடந்த 17 ஆம் திகதி...

சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கில் பணியாற்றும் அரச அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்சிகளைப் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு செயற்பாடாகவே, வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் பிரதேச செயலர்கள், உதவிச் செயலாளர்கள்...

இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார் : றெஜினோல்ட் குரே!

வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஐநா செயலர் சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது அரசாங்கம் வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்கவேண்டுமெனவும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடமே திருப்பிக்கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயம்...

பான்கிமூன் கூறினாலும் வடக்கில் இராணுவத்தைக் குறைக்கமுடியாது!

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐநா செயலர் பான்கிமூன் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ஐநா செயலர் சொன்னாலும் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கமுடியாது என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், அரசுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கில் இராணுவம் குறைக்கப்படுமெனவும், ஐநா செயலர் சொன்னதற்காக இராணுவக் குறைப்புச் செய்யமுடியாது...

இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: அரசாங்கம் கண்டனம்

மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்திருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை அரசாங்கத்தின்...

‘சரணடைந்தோர் பலர் மாயம்’ : அனந்தி

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான சில நாட்களுக்குள், பாதுகாப்புப் பிரிவினரிடம் சரணடைந்த பலர் காணாமற்போயுள்ளனர் என்று, வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்...

‘புலி எதிர்ப்புக்கு நான் அஞ்சேன்’: மஹிந்த

புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்' என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு...
Loading posts...

All posts loaded

No more posts