யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான சில நாட்களுக்குள், பாதுகாப்புப் பிரிவினரிடம் சரணடைந்த பலர் காணாமற்போயுள்ளனர் என்று, வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.