முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்ட விச ஊசிப் பரிசோதனை!

முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா...

இராணுவத்தினர் வசமிருந்த கிளிநொச்சி துயிலுமில்லம் விடுவிப்பு

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.
Ad Widget

இராணுவ முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண நிதியில் சம்பளம்

இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றபோது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்துக்குக் கடந்த 2013ஆம்...

ஆரோக்கிய மாதா தேவாலய மணி திருட்டு

பலாலி ஆரோக்கிய மாதா தேவாலய மணி நேற்று வியாழக்கிழமை திருட்டுப் போயுள்ளது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி ஆலயத்தின் பெருவிழாவுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். கடந்த 26 வருடங்களின் பின்னர் மேற்படி ஆலயத்துக்கு பொதுமக்கள் மதவழிபாடுகளை மேற்கொள்ள படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு ஆலயத்தினை பார்வையிடுவதற்கும்,...

இராணுவம் விடுவித்த காணியில் குண்டுகள் மீட்பு

'நாவற்குழி கிழக்கில் உள்ள காணியொன்றினுள் இருந்து இரண்டு குண்டுகள் இன்று நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன' என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முன்னர் இராணுவ முகாமாக இருந்து விடுவிக்கப்பட்ட 3 ஏக்கர் காணியை துப்புரவு செய்யும் பணிகள் புதன்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, காணிக்குள் குண்டுகள் இருப்பது இனங்காணப்பட்டு, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இராணுவம்...

4 வயது சிறுமி சடலமாக மீட்பு

திருகோணமலை - சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருடையது என, அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம...

புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் வடக்கில் உள்ளனர் : யாழ் கட்டளைத் தளபதி

புனர்வாழ்வு பெறாத 275 முன்னாள் போராளிகள் வடக்கில் சுதந்திரமாக உலாவருவதாகவும், அவர்கள் தாமாக முன்வந்து சரணடையாத போதிலும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றில் கலந்து...

பலாலி விமானநிலையம் புனரமைப்புச் செய்வதற்கு நிதியில்லை: அரசாங்கம்!

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக மாற்றும் நடவடிக்கைக்காக பலாலி விமானநிலையத்தை இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்திய விமான நிலைய அதிகாரசபை, சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன்படி புனரமைப்புக்குத் செலவாகும் நிதி மற்றும் அதன் வரைபினையும் அக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில், தற்போது பலாலி விமானநிலையம் பிராந்திய விமானநிலையமாக மாற்றப்படாது எனவும், அதற்கு அரசாங்கத்திடம்...

வடக்கு மக்கள் பிரபாகரனைத் தேடுகின்றனர்!

வடக்கில் மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடக்குமாகாண மக்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீண்டும் தேடுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது, வடக்கில் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வடக்கு மாகாண மக்கள் தன்னிடம் தலைவர்...

உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. 'நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படை க்கிறேன்' என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. திங்கட்கிழமை (12) விடுமுறை...

துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

உடுவில் மகளிர் கல்லூரி அரச பாடசாலையாக சுவீகரிக்கப்படும்

நிர்வாகம் சுமூகமான தீர்வினை எடுக்காவிடின் உடுவில் மகளிர் கல்லூரியை அரச பாடசாலையாக சுவீகரிப்பதற்கு வடமாகாண சபை அரசாங்கத்திடம் கோரும் நிலை ஏற்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னாள் அதிபரை மாற்றுவதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகாண...

இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது

கிளிநொச்சி - பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று, இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக...

பிரபாகரன் சிறந்த தலைவர் என்பதை இலங்கை இராணுவம்காலந்தாழ்த்தியேனும் ஏற்றுக்கொண்டுள்ளது: பொ.ஐங்கரநேசன்

வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, 'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான எந்தவித சான்றாதாரங்களும் இல்லை' என்று...

பிச்சைக்காரர் மீது காறித்துப்பிய யுவதி மீது சரமாரியான தாக்குதல்

குருநாகல், மாளிகாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து, யாசகர் ஒருவர் மீது காறித் துப்பிய யுவதி ஒருவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சரமாரியாகத் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது உலா வருகின்றன. சம்பவத்தின் போது, பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த...

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வாழவிரும்பும் முஸ்லிம்களிற்கான பதிவுகள்

யாழில் மீண்டும் மீளக்குடியேறி வாழ விரும்பும் முஸ்லிம் மக்களிற்கான காணி வீடமைப்பு வழங்கும் நிகழ்வு இன்று (7) யாழ் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது . இன்று காலை 08.30 மணியளவில் இப்பதிவுகள் கிராம சேவகர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ளப்படடன. அத்துடன் வீடு புனரமைப்பு புதிய வீட்டுத்திட்டம் போன்ற பதிவுகளும் இங்கு மேற்கொள்வதற்கு வசதிகளை பிரதேச...

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாற்றம்!

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும்...

யாழில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் வருகின்ற 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார். தற்போது தனியார் ஓருவருக்கு சொந்தமான கட்டடத்தொகுதியிலேயே யாழ் பொலிஸ் நிலையம் இயங்கிவருகின்றது. புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ் மாநகர சபை மைதானத்தின்...

சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம் கீரிமலையில் அமையவுள்ளது

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள்...

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

கடந்த வாரம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனை இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவமதித்தமை தொடர்பாக நேற்றயதினம் வடக்கு மாகாண சபையில் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேற்றயதினம் வடக்கு மாகாண சபையின் 61 ஆவது அமர்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்...
Loading posts...

All posts loaded

No more posts