முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் நாடுகடத்தப்பட்டார்!

போலிக்கடவுச்சீட்டின்மூலம் ஜேர்மனிக்குச் செல்லவிருந்த சுப்பையா சுதன் எனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் பூனே விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். கடந்த 1ஆம் திகதி லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த...

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழிழும் தேசிய கீதம் பாடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
Ad Widget

கோத்தாபாய கடற்படைமுகாமுக்குள் 500 கடற்படையினர்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர். காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர். குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன்...

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை மாணவிகள்...

கதிர்காமத்தில் தேரர் மீது தாக்குதல்

கதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது நேற்று மாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை விகாரைக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேரர் தற்பொழுது தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும் பொலிஸார் மேலதிக...

போலி பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

இந்த வருடத்தில் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் 1570 பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி அவசர நடவடிக்கை பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் முதல் 8 மாதங்கள் வரையான கால பகுதியில் மாத்திரம் பேஸ்புக்...

முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் அன்பளிப்பு

யுத்தத்தால் தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது. அமெரிக்காவின் யு.எஸ் எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அனுசரணையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் நேரடி யுத்தம்,...

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். மேற்படி ஆசிரியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்காக ஆவணங்களை பரிசீலணை செய்தபோதே இவர்களின் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை...

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச வைத்திய பரிசோதனை

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச வைத்திய பரிசோதனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், அதை கட்டாயமாக்குவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரோல், பீ.எம்.ஐ சோதனைகள் போன்றவற்றிற்காக வைத்தியசாலைகளில் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், பின்னர் அவற்றை கிராமிய வைத்தியசாலைகள் வரை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்....

ஜனாதிபதியிடம் மகஜர் கையளித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துக்...

சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: முதலமைச்சர் சி.வி

'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற...

கணவனால் தீ மூட்டப்பட்ட இளம் மனைவி மரணம்

கணவனால் தீ மூட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (08) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான கிரிசாந்தன் கல்பனா (வயது 21) என்பவரே உயிரிழந்தார். கடந்த 28ஆம் திகதி இரவு...

விஷ ஊசி விவகாரம்: இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்று (9) காலை 8.00 மணிமுதல் இந்த பரிசோதனைகள் ஆரம்பமாகின. விஷ ஊசி விவகாரம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 2ஆம்...

 ‘வடக்கின் அபிவிருத்தி தடைகள் நிவர்த்தி செய்யப்படும்’ : யாழில் ஜனாதிபதி

'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார்....

யாழில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் ஜனாதிபதி

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். பலாலிக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது...

யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக...

சிறுமி கொலை தொடர்பில் 16 வயது சிறுவன் கைது

சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகநபர் சம்பூர் - நீலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த 4 வளது சிறுமி...

தெல்லிப்பளையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

தெல்லிப்பளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தெல்லிப்பளை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவரொருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும் , அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை , கிளிநொச்சியில் ஆண் ஒருவரின்...

சுன்னாக பொலிசாருக்கு எதிராக , சுன்னாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுன்னாக பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலளர்கள் இருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது , உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது. அதன் போது...

முடிவுக்கு வந்தது பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம்!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தன்னிடம் இன்னும் 15 நாட்களுக்குள் பரவிபாஞ்சான் மக்களின் ஒருதொகுதி காணி...
Loading posts...

All posts loaded

No more posts