Ad Widget

புங்குடுதீவு மாணவி படுகொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது விண்ணப்பங்கள் செய்யவுள்ளீர்களா என கேட்டார்.

இதற்கு சந்தேக நபர்களில் ஒருவர் தம்மை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், தமது வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மரபணு அறிக்கையை தமக்கு காட்டுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாணவி வித்தியாவை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

இவற்றிற்கு பதிலளித்த நீதவான், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவால் பூரணப்படுத்தப்பட்டு அவை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாகவே வழக்கானது மேல் நீதிமன்றிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.



இந்த வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மரபணு அறிக்கையை மேல் நீதிமன்றில் வைத்தே காட்டப்படும் எனவும் குறித்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தமை மாத்திரம் குற்றமில்லை எனவும் அவளை கொலை செய்தமையும் குற்றம் எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம். றியால் உத்தரவிட்டிருந்தார்.

Related Posts